பக்கவாதத்திற்குப் பின் விசைஊட்டிய நடைமேடை பின்னூட்டுடன் நிற்கும் சமநிலைக்கான பயிற்சி

விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டின் மூலம் நிற்பதற்கான உடல்சமன் மேம்படும், ஆனால் தனித்து செயல்படும் அதன் தாக்கம் தெளிவற்று உள்ளது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டோர் நிற்கும்போது உடல் சமன்பாடு சார்ந்த பிரச்சனைகளை பெரும்பாலும் சந்திக்கின்றனர். நிற்கும் போது ஏற்படும் உடல்சமன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சமன் சீர் செய்யும் பயிற்சிகள் இயன்முறை சிகிச்சையாளர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. சில வேளைகளில் விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டில்அளிக்கப்படும் பயிற்சிகள் ஒருவருடைய நிற்கும் நிலையை உணர்த்துகிறது. ஏழு மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகள், விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டின் மூலம் செய்யும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டோரின் நிற்பதற்கான சமனை மேம்படுத்துகிறதேயன்றி அவர்களின் அன்றாட செயல்களையோ அல்லது தனித்து செயல்படும் திறனையோ அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information