கீழ்-முதுகு வலிக்கான தனிப்பட்ட நோயாளி விளக்கக் கல்வி

கீழ்-முதுகு வலி, குறிப்பாக வளர்ந்த நாடுகளில் காணப்படுகிற ஒரு மிக பொதுவான நிலைமையாகும். இது மிகுந்த வலி மற்றும் செயலற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடும்.

மக்கள் கீழ்-முதுகு வலி பற்றி தெரிந்து கொள்ளவும் மற்றும், அதை பற்றி செய்ய வேண்டியவை என்ன என்பதிற்கு மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்தும் நோயாளி விளக்கக் கல்வி உள்ளடக்குவதாவது:

- சுறுசுறுப்பாக தங்கி மற்றும் விரைவில் வழக்கமான நடவடிக்கைககளுக்கு திரும்புதல் - கவலையை தவிர்த்தல்-முதுகு வலியை சமாளித்தல் - சிரமம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும்முதுகு காயங்களை தவிர்க்கும் வழி வகைகள்

நோயாளிக்கான விளக்கக் கல்வி என்பது, மருத்துவ நிபுணருடன் கூடிய ஆலோசனை, ஒரு சிறப்பு வகுப்பு, வீட்டிற்கு எடுத்து செல்லத்தக்கதான தகவல் எழுதப்பட்ட கையேடு, அல்லது ஒரு காணொளி போன்ற பிற வடிவங்களில் அடங்கும்.

இந்த ஆய்வுரை, கீழ்-முதுகு வலி உள்ளவர்களில் வெவ்வேறு வகையான நோயாளிக்கான விளக்கக் கல்வியை சோதனை செய்த 24 சோதனை படிப்புகளை கண்டறிந்தது. அளவிடப்பட்ட விளைவுகள் வலி, செயல்பாடு மற்றும் பணிக்கு திரும்புதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

வழக்கமான பராமரிப்புடன், குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் நேருக்கு-நேராக அளிக்கப்பட்ட விளக்கக் கல்வி தொடரை பெற்ற கீழ்-முதுகு வலியுடைய மக்கள், வழக்கமான பராமரிப்பை மட்டும் பெற்ற மக்களை விட சிறந்த விளைவுகளை பெற்றனர். குறுகிய கால கல்வி தொடர்கள், அல்லது நேருக்கு-நேராக அளிக்கப்பட்ட நோயாளிக்கான விளக்கக் கல்வி தொடர் அல்லாமல் வெறும் எழுத்து வடிவு தகவல் மட்டும் எந்த பலனையும் அளிப்பதாக தெரியவில்லை.

நாள்பட்ட(நெடிய-கால) கீழ்-முதுகு வலி கொண்ட மக்கள் கடுமையான (குறுகிய-கால) வலி கொண்ட மக்களை விட குறைந்த அளவில் மட்டுமே பயன் பெற்றனர்.

பிற சிகிச்சை தலையீடுகளான புலனறிந்து நடத்தல் குழு சிகிச்சை, பணி-தள வருகைகள், ஊடு-கதிர்கள், குத்தூசி மருத்துவம், இயன்முறை சிகிச்சை, உருவு சிகிச்சை (மசாஜ்), கையாள்கைச் சிகிச்சை, வெப்ப இயன்முறை சிகிச்சை,உருவு சிகிச்சை (மசாஜ்), கையாளுதல்சிகிச்சை, வெப்ப-சுற்று சிகிச்சை, இண்டர்பிரேன்சியல் (interferential) சிகிச்சை, முதுகு நிலைப்படுத்துதல், யோகா, அல்லது முதுகு வலிக்கான ஸ்வீடிஷ் பள்ளி ஆகியவற்றை காட்டிலும் நோயாளிக்கான விளக்கக் கல்வி பயனளிக்கவில்லை. சில செயல்பாட்டு அளவீடுகளுக்கு, உடற்பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டதை காட்டிலும் நோயாளிக்கான விளக்கக் கல்வி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது.

வெவ்வேறு வகை நோயாளிக்கான விளக்கக் கல்வி முறைகளை ஒப்பிட்ட ஆய்வுகள் எந்த வகையான விளக்கக் கல்வி முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதற்கு தெளிவானமுடிவுகளை காணவில்லை. எழுத்து வடிவு தகவல், நேருக்கு-நேராக அளிக்கப்பட்ட விளக்கக் கல்வியை போலவே பயனுள்ளதாக இருந்தது என சில ஆய்வுகள் கண்டறிந்தது.

மேலும், நோயாளிக்கான விளக்கக் கல்வி எந்தவொரு தீய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என தெரிகிறது. ஆய்வுரையில் 24 ஆய்வுகள் இணைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைகளை ஒன்று அல்லது இரண்டு ஆய்வுகள் மட்டுமே சோதனை செய்தது. இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு, மற்றும் எந்த வகையான நோயாளிக்கான விளக்கக் கல்வி முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு அதிகப்படியான ஆராய்ச்சி தேவையாய் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information