(புறநரம்பு இயக்க கோளாறு) புறநரம்புகளைத் தாக்கும் நோய்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை

புறநரம்பு இயக்க கோளாறுகள் புறநரம்புகளைப் பாதிக்கும் பலதரப்பட்ட நோய்களை (பெறப்பெற்ற மற்றும் மரபியல் நோய்கள்) உள்ளடக்கியது. கூரிய கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை போன்ற மாறுபட்ட உணர்வு, தசை வலிமை குன்றல், அயர்வு மற்றும் வலி போன்றவை இதன் அறிகுறிகள். புறநரம்பு இயக்க கோளாறுகளுக்கு அளிக்கப்படும் பல புனர்வாழ்வு திட்டங்களில், வலிமை மற்றும் திண்மையை அதிகபடுத்தும் நோக்கோடு செய்யப்படும் உடற்பயிற்சி சிகிச்சை ஒரு பகுதியாக உள்ளது. புறநரம்பு இயக்க கோளாறுகளால் ஏற்படும் இயலாமைக்கு உடற்பயிற்சியின் தாக்கம் பற்றி மதிப்பிட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. புறநரம்பு இயக்க கோளாறு உள்ளவர்களுக்கு தசை பலமாக்கும் உடற்பயிற்சிகள் மிதமான அளவு தசை வலிமையை அதிகரிக்கும் என்று கூற ஆதாரம் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information