பக்கவாட்டு முழங்கை அல்லது முழங்கால் தசை நாண் அழற்சி சிகிச்சைக்கான ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல்

திறனாய்வு கேள்வி

பக்கவாட்டு முழங்கை அல்லது முழங்கால் தசை நாண் அழற்சி கொண்ட மக்களுக்கு ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையின் விளைவுகளின் மேலான ஒரு மேம்படுத்தப்பட்ட திறனாய்வை நாங்கள் நடத்தினோம். 57 மக்களை கொண்ட இரண்டு ஆய்வுகளை நாங்கள் கண்டோம் (கூடுதலான புதிய ஆய்வுகள் இந்த மேம்படுத்தலில் இல்லை).

பின்னணி: தசை நாண் அழற்சி என்றால் என்ன மற்றும் ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் என்றால் என்ன?

தசை நாண்கள் என்பது, தசையையும் எலும்பையும் இணைக்கும் நார் அமைப்புகளாகும். ஒரு தசை நாண் வீக்கத்தால் (வலியுள்ள வீக்கம்) பாதிப்படையும் போது, தசை நாண் அழற்சி முக்கியமாக காணப்படுகிறது. மீண்டும் மீண்டும் அசைவுகளை செய்வதினால் தசை நாணில் ஏற்படும் அதிகப்படியான தகைப்பு வீக்கத்தை உண்டாக்குகிறது. இது, முழங்கை அல்லது முழங்காலில் வலி மற்றும் விரைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சை என்பது சேதத்தை குறைக்கவும் மற்றும் வீக்கத்தால் ஏற்படும் தழும்பை குறைக்கவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பிசியோதெரபி செய்முறையாகும். அது ஒரு மூட்டில் இரத்த ஓட்டத்தை அதிகபடுத்தி, பிராணவாயு வழங்கலை காயத்திற்கு கடத்துதல் மூலம் தசை நாணின் குணப்படுதலை ஊக்குவிக்கிறது.

ஆய்வு பண்புகள்

ஐந்து வாரங்கள் கால அளவைக் கொண்ட ஒரு ஆய்வு, 1) பக்கவாட்டு முழங்கை தசை நாண் அழற்சி (டென்னிஸ் எல்போ) கொண்ட 20 மக்களில், நுன்னொலி சிகிச்சை மற்றும் போலி களிம்போடு சேர்த்து வழங்கப்பட்ட ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையின் விளைவுகளை, நுன்னொலி சிகிச்சை மற்றும் போலி களிம்போடு ஒப்பிட்டு 2) பக்கவாட்டு முழங்கை தசை நாண் அழற்சி (டென்னிஸ் எல்போ) கொண்ட 20 மக்களில், போனோபோரேசிஸ் உடன் சேர்த்து வழங்கப்பட்ட ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையின் விளைவுகளை, வெறும் போனோபோரேசிஸ் உடன் ஒப்பிட்டு திறனாய்வு செய்தது. இரண்டு வாரங்கள் கால அளவைக் கொண்ட மற்றொரு ஆய்வு, பக்கவாட்டு முழங்கால் தசை நாண் அழற்சி கொண்ட 17 மக்களில், பிசியோதெரபி சிகிச்சை தலையீட்டோடு சேர்த்து வழங்கப்பட்ட ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையின் விளைவுகளை, வெறும் பிசியோதெரபி சிகிச்சை தலையீட்டோடு ஒப்பிட்டு திறனாய்வு செய்தது.

முக்கிய முடிவுகள்

பக்கவாட்டு முழங்கை தசை நாண் அழற்சி (டென்னிஸ் எல்போ) கொண்ட மக்களுக்கு ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையை அளிப்பத்தினால் என்ன நேரும்?

ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சை வலி மற்றும் செயல்பாட்டை முன்னேற்றுமா (மிக குறைந்த தர சான்று) என்பதை பற்றி நாங்கள் நிச்சயமற்றவர்களாக இருக்கிறோம்.

30% அல்லது அதற்கு அதிகமான வலி குறைவு, செயல்பாடு, வாழ்க்கைத் தரம், நோயாளியின் ஒட்டுமொத்த மதிப்பீடு, தீய நிகழ்வுகள், மற்றும் தீய விளைவுகளால் ஏற்பட்ட ஆய்வு விலகல்கள் ஆகியவை பற்றி எந்த ஆய்வுகளிலும் அறிக்கையிடப்படவில்லை.

பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி துல்லியமான விவரம் எங்களுக்கு பெரும்பாலும் இல்லை. இது மிக குறிப்பாக, அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகளுக்கு பொருந்தும்.

பக்கவாட்டு முழங்கால் தசை நாண் அழற்சி கொண்ட மக்களுக்கு ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சையை அளிப்பத்தினால் என்ன நேரும்?

ஆழ் குறுக்கு உராய்வு நீவுதல் சிகிச்சை வலியை குறைக்குமா (மிக குறைந்த தர சான்று) என்பதை பற்றி நாங்கள் நிச்சயமற்றவர்களாக இருக்கிறோம்.

30% அல்லது அதற்கு அதிகமான வலி குறைவு, செயல்பாடு, வாழ்க்கைத் தரம், நோயாளியின் ஒட்டுமொத்த மதிப்பீடு, தீய நிகழ்வுகள், மற்றும் தீய விளைவுகளால் ஏற்பட்ட ஆய்வு விலகல்கள் ஆகியவை பற்றி எந்த ஆய்வுகளிலும் அறிக்கையிடப்படவில்லை.

பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றி துல்லியமான விவரம் எங்களுக்கு பெரும்பாலும் இல்லை. இது மிக குறிப்பாக, அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகளுக்கு பொருந்தும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information