மித-குறுகிய கால கீழ் முதுகு வலிக்கு பல்முனை உயிர் உளச்சமூகவியல் (biopsychosocial) புனர்வாழ்வு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கீழ் முதுகு வலி உள்ள பெரியவர்களுக்குப் (adults) பல்முனை உயிர் உளச் சமூகவியல் புனர்வாழ்வு திட்டம் (பணியிட விஜயம் உட்பட) சிறிதளவு பயன் அளிக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், இதன் திறன் மற்றும் விலைபயன் திறன் பற்றி அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

நீண்ட காலமாக இருக்கும் கீழ் முதுகு வலி, உடல், உளவியல் மற்றும் சமூக இன்னல்களை ஏற்படுத்தலாம். அந்த காரணத்திற்காக, உடற்சார்ந்த புனர்வாழ்வு, உளவியல், நடத்தை மற்றும் கல்வி தலையீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். சில வலி மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், வெளிநோயாளிகளுக்கான புனர்வாழ்வாகவும் இது போன்ற பல்முனைத் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. வேலைக்குச் செல்லும் வயது உடைய பெரியவர்களுக்கு இந்த வகையான புனர்வாழ்வு திறன்வாய்ந்தது என்பதற்கு மிதமான ஆதாரங்களை ஆய்வுகளில் இருந்து இந்த திறனாய்வு கண்டறிந்தது. பணியிட விஜயம் உட்பட பல்முனை புனர்வாழ்வுக்குச் சில பயன்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறினாலும், இதன் திறன் மற்றும் விலைபயன் திறன் பற்றி அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு