பெல்ஸ் பேல்சிக்கு கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள்

திறனாய்வு கேள்வி

பெல்ஸ் பேல்சி மேல் கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்களின் விளைவுகள் என்ன?

பின்புலம்

பெல்ஸ் பேல்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், முகத்தில் ஒரு பக்கத்தில் ஏற்படக் கூடிய தசைகளின் வாதம் அல்லது பலவீனமாகும். எப்போதுமே இல்லாவிட்டாலும், பொதுவாக அறிகுறிகள் தாமாகவே மீளப்பெறும். முக நரம்பின் வீக்கத்தை கார்ட்டிகோ -ஸ்டிராய்ட் மருந்துகளை ( ஸ்டிராய்ட்கள் ) பயன்படுத்தி குறைப்பது நரம்பின் சேதத்தை கட்டுப்படுத்தும் என்று எண்ணப்படுகிறது. இது, முதன் முதலில் 2002ல் வெளியிடப்பட்டு மற்றும் 2010ல் புதுப்பிக்கப்பட்ட திறனாய்வின் சமீபத்திய புதுப்பித்தலாகும்.

ஆய்வு பண்புகள்

ஒரு-பக்கத்தில், லேசாக, மிதமாக அல்லது கடுமையான, காரணம் அறியப்படாத பெல்ஸ் பேல்சி கொண்ட 895 மக்களை உள்ளடக்கிய ஏழு மருத்துவ சோதனைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். இந்த அனைத்து சோதனைகளும் முழுமையற்ற மீட்சி விகிதங்களை (முக தசை பலவீனத்தோடு மீட்சி பெற்ற மக்கள் விகிதாச்சாரம்) அறிக்கையிட்டு இருந்தன, மற்றும் முடிவுகளை எங்களால் இணைக்க முடிந்தது. 2 முதல் 84 வருடங்கள் வரையான ஆய்வு மக்கள் இருந்தனர். தனியாகவோ அல்லது பிற சிகிச்சைகளோடு கூட்டாகவோ, அவர்கள் கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் அல்லது போலி சிகிச்சை (செயலற்ற சிகிச்சை) கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஒரு சோதனை, 24 மாதங்கள் முதல் 74 மாதங்கள் வரை வயதையுடைய குழந்தைகளை மட்டும் உள்ளடக்கியிருந்தது. வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளின் கால அளவு 157 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை நீடித்திருந்தன.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

முழுமையற்ற மீட்சி

மிதமான முதல் உயர் தர ஆதாரத்தின் அடிப்படையில், போலி (பாவனை) சிகிச்சையோடு ஒப்பிடுகையில் பெல்ஸ் பேல்சிக்கு பின் முக தசை பலவீனத்தை கொண்ட மக்களின் எண்ணிக்கையை கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் குறைத்தன. இந்த முடிவுகள், வெவ்வேறான விகிதங்களில் பெல்ஸ் பேல்சி தீவிரத்தை கொண்டிருந்த ஏழு ஆய்வுகளிலிருந்த 895 பங்கேற்பாளர்களின் தரவை அடிப்படையாக கொண்டிருந்தன. ஒரு நபர் முக தசை பலவீனத்தோடு விடப்படுவதை தடுப்பதற்கு, 10 பேருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று நாங்கள் கணக்கிட்டோம்.

சிகிச்சைக்கு பின்னர், பெல்ஸ் பேல்சியின் நீண்ட-கால பின்- விளைவுகளின் தரவை ஐந்து ஆய்வுகள் அளித்திருந்தன. இரண்டு ஆய்வுகள் ( 75 பங்கேற்பாளர்கள்), ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக முக தோற்றத்தின் மீது நீடித்து இருக்க கூடிய விளைவுகளை கண்டன. கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் கொண்ட பங்கேற்பாளர்கள் லேசான நன்மையை பெற்றனர், ஆனால் இதற்கு குறைந்த தர ஆதாரமே உள்ளது. ஆதலால், கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் மற்றும் போலி சிகிச்சை இரண்டிற்கும் விளைவு ஒரே மாதிரி இருந்தது, வெறும் போலி சிகிச்சையை மட்டும் பெற்ற மக்களோடு ஒப்பிடுகையில், கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் பெற்றவர்களுக்கு குறைந்தளவு தேவையற்ற முக அசைவுகள் மற்றும் முதலை கண்ணீர் (சாப்பிடும் போது அல்லது மெல்லும் போது கண்களில் கண்ணீர் வருவது) உருவாகியது என்று மூன்று ஆய்வுகளிலிருந்து (485 பங்கேற்பாளர்கள்) தரவு தெளிவாக காட்டியது இந்த முடிவு மிதமான-தர ஆதாரத்தை அடிப்படையாக கொண்டது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள் கார்ட்டிகோ -ஸ்டிராய்ட் சிகிச்சைக்கு தொடர்புடையதாக இருக்காது என்று மூன்று ஆய்வுகள் அறிக்கையிட்டன. மூன்று ஆய்வுகளின் (715 பங்கேற்பாளர்கள்) மிதமான-தர ஆதாரத்தை அடிப்டையாகக் கொண்டு, கார்ட்டிகோ -ஸ்டிராய்ட்கள் மற்றும் போலி சிகிச்சையோடு பக்க விளைவுகளை அனுபவித்த மக்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருந்தன.

இந்த ஆதாரம் மார்ச் 2016 வரை நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information