கீழ்-முதுகு வலிக்கான மசாஜ் சிகிச்சை

திறனாய்வு கேள்வி

கீழ்-முதுகு வலி (லோ பேக் பெயின், எல்பிபி) கொண்ட மக்களுக்கு மசாஜ் சிகிச்சையின் விளைவுகள் என்ன?

பின்புலம்

எல்பிபி மிக பொதுவானதாகும். பெரும்பாலான முதுகு வலி எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் மேம்படக் கூடும், 10% வரை மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் வரை நீடிக்கக் கூடும். வலியை குணப்படுத்த மற்றும் முதுகு வலி கொண்ட தனி நபர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அநேக சிகிச்சைகள் இருக்கின்றன. அத்தகைய சிகிச்சைகளில் ஒன்று, மசாஜ் ஆகும்.

தேடல் தேதி

07 ஆகஸ்ட் 2014-ல், தேடல்களை நாங்கள் மேம்படுத்தினோம், மற்றும் இந்த மேம்பட்ட திறனாய்வில் 12 கூடுதலான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை சேர்த்தோம்.

ஆய்வு பண்புகள்

மொத்தத்தில், 25 சோதனைகள் மற்றும் 3096 பங்கேற்பாளர்களை இந்த மேம்பட்ட திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். ஒரே ஒரு சோதனை மாத்திரம், குறுகிய-கால எல்பிபி (நான்கு வாரங்களுக்கு குறைவான வலியின் கால அளவு), கொண்ட நோயாளிகளை சேர்த்தது; பிற அனைத்தும் மிதமான-கால எல்பிபி (நான்கு முதல் பன்னிரண்டு வாரங்கள் வரை) அல்லது நாள்பட்ட எல்பிபி ( பன்னிரண்டு வாரங்கள் அல்லது அதற்கும் நீடிய) கொண்ட நோயாளிகளை சேர்த்தன. மூன்று ஆய்வுகளில், ஒரு இயந்திர கருவி ( தோலிற்கு அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு உலோக தண்டுகம்பி அல்லது ஒரு அதிரும் கருவி) கொண்டு மசாஜ் அளிக்கப்பட்டது, மற்றும் பிற சோதனைகளில், கைகளை பயன்படுத்தி அது செய்யப்பட்டது. இந்த ஆய்வுகளில், நடத்தல், தூங்குதல், குனிதல் மற்றும் எடைகளைத் தூக்குதல் ஆகிய முதுகு-சம்பந்தமான செயல்பாட்டிற்கு முன்னாக, வலியின் தீவிரம் மற்றும் தரம் ஆகியவை மிக பொதுவான விளைவுகளாக மதிப்பிடப்பட்டன.

ஆய்வு நிதி மூலங்கள்

ஏழு ஆய்வுகள் நிதி மூலங்களை பற்றி அறிக்கையிடவில்லை, பதினாறு ஆய்வுகள் லாப-நோக்கு அல்லாத நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டன. ஒரு ஆய்வு எந்த நிதியையும் பெறவில்லை என்று அறிக்கையிட்டது, மற்றும் ஒரு ஆய்வு, மசாஜ் தெரபிஸ்ட்டுகளின் கல்லூரி மூலம் நிதி பெற்றது.

முக்கிய முடிவுகள்

விளைவுகளை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கப்படாத சிகிச்சை தலையீடுகளை (செயலற்ற கட்டுப்பாடுகள்) மசாஜ்-உடன் ஒப்பிட்ட எட்டு ஆய்வுகள் இருந்தன, மற்றும் விளைவுகளை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிகிச்சை தலையீடுகளை (செயல் கட்டுப்பாடுகள்) மசாஜ்-உடன் ஒப்பிட்ட பதின்மூன்று ஆய்வுகள் இருந்தன. நீண்ட-கால பின் தொடர்தலில் அல்லாது, குறுகிய-காலத்தில், வலி மற்றும் செயல்பாட்டில், செயலற்ற கட்டுப்பாடுகளை விட, மசாஜ் சிறந்ததாக இருந்தது. நீண்ட-கால பின் தொடர்தல் மற்றும் குறுகிய-காலத்தில், வலி மற்றும் செயல்பாட்டில், மசாஜ் சிறந்ததாக இருந்தது, ஆனால் குறுகிய-காலத்தின் போதோ அல்லது நீண்ட-கால பின் தொடர்தலின் போதோ, செயல்பாட்டில் எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை. இந்த சோதனைகள் எவற்றிலும், அபாயமான எதிர்மறை விளைவுகள் பற்றி எந்த அறிக்கைகளும் இல்லை. 1.5% முதல் 2.5% வரையான பங்கேற்பாளர்களில், மிக பொதுவான எதிர்மறை விளைவுகளாக அதிகரித்த வலியின் தீவிரம் இருந்தன.

சான்றின் தரம்

அனைத்து ஒப்பீடுகளுக்கும், சான்றின் தரம் "குறைவு" அல்லது " மிக குறைவு" என்று மதிப்பிடப்பட்டன, இதென்னவென்றால், இம்முடிவுகளில் எங்களுக்கு மிக சிறிதளவிலேயே நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தமாம். சேர்க்கப்பட்டிருந்த பெரும்பாலான ஆய்வுகள் சிறிதாகவும் மற்றும் செயல்முறையியல் குறைகளை கொண்டவையாகவும் இருந்ததே இதற்கு காரணமாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information