கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு கால்சியம் எதிர்வினையூக்கிகள் (Calcium antagonists)

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மூளையில் ஒரு தமனியின் இரத்த ஓட்டத்தை குருதியுறை தடுப்பதால் பெரும்பான்மை பக்கவாதங்கள் நிகழ்கின்றன. அந்த தமனி ரத்தம் வழங்கும் மூளை பகுதி வேகமாக சேதமடையும். மூளை செல்களின் ஒரு சில சேதங்கள், செல்களின் உள்ளே கால்சியம் அயனிகளின் ஒரு கட்டுமானதொகுதி உருவாவதால் ஏற்படுகிறது. செல்களுக்குள் நுழையும் கால்சியம் அயனிகளை தடுப்பதன் மூலம் கால்சியம் எதிர்வினையூக்கிகள் சேதத்தை குறைக்க உதவலாம். நாங்கள் ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாத நோயாளிகளுக்கு கால்சியம் எதிர்வினையூக்கிகளின் (சிரை வழி ஊசிஅல்லது வாய் மூலம் அல்லது கொடுக்கப்பட்ட) விளைவுகளை மதிப்பிட்ட ஆய்வுகளை தேடினோம். இந்த திறனாய்விற்கு பயன்படுத்த ஏற்றதாக இருந்த 7731 நோயாளிகள் கொண்ட 34 ஆய்வுகளை அடையாளம் கண்டோம். கால்சியம் எதிர்வினையூக்கிகள் எடுத்துக் கொண்டவர்களுக்கும் அதனை பெறாத நோயாளிகளுக்கும் இடையே இறப்புகள் அல்லது உயிர் தப்பியவர்களில் இயலாமை குறைப்பில் எந்த வேறுபாடும் இல்லை. சிரை வழி ஊசி மூலம் கால்சியம் எதிர்வினையூக்கிகள் பெற்ற நோயாளிகள் அந்த மருந்தை வாய் வழி பெற்றவர்களை விட மொத்தத்தில் சற்றே மோசமாக இருந்தனர். இறுதியாக, கால்சியம் எதிர்வினையூக்கிகள் கடுமையான ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு உயிர்களை காப்பாற்றும் அல்லது இயலாமை குறைக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த காக்ரேன் திறனாய்வின் ஆசிரியர்கள் முடிவுக்கு வந்தனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்