ஆரோக்கிய தொழில்முறை வல்லுநர்களை இலக்காக கொண்ட சிகிச்சை தலையீடுகள், மற்றும் பராமரிப்பின் தொடர்ச்சியை அதிகரிக்கும் நிறுவன சிகிச்சை தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் முதல் நிலை பராமரிப்பு, வெளி நோயாளி மற்றும் சமூக அமைப்புகளில் நீரிழிவு நோய் மேலாண்மையை மேம்படுத்தல

நீரிழிவு நோய் ஒரு முதன்மையான மற்றும் வளர்ந்து வருகிற ஆரோக்கிய பிரச்னையாகும். முதல் நிலை பராமரிப்பு, வெளி நோயாளி மற்றும் சமூக அமைப்புகளில் நீரிழிவு நோய் மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, ஆரோக்கிய வல்லுநர்களை இலக்காய் கொண்ட அல்லது பராமரிப்பு என்ன வழியில் அமைக்க பெற்றுள்ளது என்பதான சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. பல அம்ச தொழில்முறை சிகிச்சை தலையீடுகள் (எடுத்துக்காட்டிற்கு, முதுநிலை படிப்பு, நினைவூட்டல்கள், தணிக்கை மற்றும் பின்னூட்டல், வட்டார கருத்து இணக்க முறைகள், மற்றும் சரியிணை திறனாய்வு ஆகியவற்றின் கூட்டுகள்) பராமரிப்பு அளிப்பவர்களின் செயல்திறனை மேம்படுத்த கூடும் என்று திறனாய்வு கண்டது. கட்டமைக்கப்பட்ட நினைவு கூரலை அதிகரித்த மத்திய கணினிமயமான தொடர்தல் அமைப்புகள் அல்லது நோயாளிகளை சீராக தொடர்பு கொண்ட செவிலியர்கள் போன்ற நிறுவன சிகிச்சை தலையீடுகளும், நீரிழிவு நோய் கொண்ட நோயாளிகளில் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பிற்கு வழி வகுத்தன. நோயாளி விளைவுகள்( க்லைசிமிக் கட்டுப்பாடு, இதயத்தமனி அபாய காரணிகள், ஒட்டுமொத்த நலம்) மீதான இந்த சிகிச்சை தலையீடுகளின் திறன் குறைந்த தெளிவுள்ளதாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information