பிரசவத்தைத் தூண்ட வாய்வழி மிசோப்ரோஸ்டால் (misoprostol)

வாய்வழி மிசோப்ரோஸ்டால் (misoprostol) பிரசவத்தை தூண்டுவதில் திறனானது; இது, மருந்துப்போலியை விட திறனானது, யோனிவழி கொடுக்கப்படும் மிசோப்ரோஸ்டால் (misoprostol) போன்று வாய்ந்தது; மற்றும் யோனி வழி டைநோப்ரோஸ்டோன் (dinoprostone) அல்லது ஆக்ஸிடாஸினை, விட குறைவாக சிசேரியன் அறுவை சிகிச்சை தேவையை உண்டுப்பண்ணும். எனினும், இதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த அளவை தீர்மானிக்க சமவாய்ப்பீட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளிலிருந்து போதுமான தரவுகள் இன்றுவரை இல்லை.

கருவுற்ற கடைசி காலத்தில் கர்ப்பிணி பெண் அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் சிக்கல்களை தடுக்க பிரசவத்தூண்டல் பயன்படுத்தப்படுகிறது. காலந்தாழ்ந்தும் பிரசவவலிவராமை பிரசவத்திற்கு முன் சவ்வுகள் சிதைவடைதல், மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை பிரசவ தூண்டல் பயன்படுத்த காரணங்கள் ஆகும். ப்ரோஸ்டாக்ளாண்டின்ஸ் என்னும் ஹார்மோன்கள் இயற்கையாகவே கர்ப்பபையில் (கருப்பை) உள்ளன; அவை பிரசவத்தின் போது கருப்பை வாயை மென்மையாக்கும் மற்றும் கருப்பை தசைகளை சுருங்க தூண்டும் செயற்கை ப்ரோஸ்டாக்ளாண்டின்ஸ் E2டைநோப்ரோஸ்டோனை பிரசவத்தை தூண்ட யோனிவழி செலுத்தயியலும்.ஆனால் அவை அறை வெப்பநிலையில் நிலையற்ற தன்மையுள்ளதாக இருக்கும்.மேலும் விலையும் அதிகம். வாய்வழி மிசோப்ரோஸ்டால் மலிவானதும் மற்றும் வெப்பத்தில் சிதையாத நிலைத்த தன்மையுள்ளதும் ஆகும். இது முதலில் வயிற்று புண்கள் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட புரோஸ்டாகிளாண்டின் E1-இன் செயற்கை மாதிரி ஆகும்.

76 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளைக் (14,412 பெண்கள்) கொண்ட இந்த ஆய்வு வாய்வழி மிசோப்ரோஸ்டால் (misoprostol) தூண்டல் குறைந்தபட்சம் தற்போதைய தூண்டல் முறைகளின் அளவிற்கு பயனுள்ளதாக தோன்றுகிறது என்று கண்டறிந்தது. ஒன்பது சோதனைகள் (1,282 பெண்கள்) வாய்வழி மிசோப்ரோஸ்டால் (misoprostol), ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் மூலம் உட்செலுத்தப்படுவதற்கு நிகரானது என்று காட்டியது, ஆனால் கணிசமாக குறைந்த சிசேரியன் சிகிச்சை தேவையை ஏற்படுத்தியது. பனிக்குட திரவத்தில் அதிக விகிதம் மெகோனியம் நிறமேற்றுதல், பிறக்காத குழந்தையின் எந்த பாதகமான விளைவுகளுக்கும் தொடர்புடையது இல்லை. இது குழந்தையின் குடலில் இருக்கும் மிசோப்ரோஸ்டாலினின் (misoprostol) ஒரு நேரடி விளைவாக இருக்க முடியும். இந்த பாதிப்பு யோனி வழி மிசோப்ரோஸ்டாளுடன் (misoprostol) ஒப்பிடுகையில் அதிலும் இருந்தது ஆனால் குறைவாக இருப்பதாக தோன்றியது . வாய்வழி மற்றும் யோனிவழி மிசோப்ரோஸ்டாலை (misoprostol ) ஒப்பிட்ட 37 (முப்பது ஏழு) சோதனைகள் (6,417 பெண்கள்) ஒரே மாதிரியான விளைவுகளுள்ளதாக தகவல் தந்தன. ஆனால் வாய்வழி மிசோப்ரோஸ்டாலை (misoprostol) எடுத்தவர்களுக்கு பிரசவத்தின் போது சிறப் பான குழந்தை பிறப்புக்கு முந்தைய நிலையும், குறைவான இரத்தப் போக்குடைய குழந்தை பேறுக்குபிந்தைய நிலையும் இருந்தது.

12 (பன்னிரண்டு) சோதனைகளில் (3,859 பெண்கள்), வாய்வழி மிசோப்ரோஸ்டோலை (misoprostol) யோனி டைநோப்ரோஸ்டோனுடன் (dinoprostone) ஒப்பிடுகையில், மிசோப்ரோஸ்டோல் (misoprostol) கொடுக்கப்பட்ட பெண்களுக்கு, தூண்டல் ஒட்டுமொத்தமாக மெதுவாக இருந்திருக்கலாம் என்றாலும் சிசேரியன் (26% உடன் ஒப்பிடுகையில் 21% பெண்களுக்கு) வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த ஆய்வுகளில் மிசோப்ரோஸ்டோலின் பொதுவான மருந்து அளவு 20 McG ஆக இருந்தது. அதிகளவு தூண்டுதல் மற்றும் மெகோனியம் நிறமேற்றி விகிதங்கள் மிசோப்ரோஸ்டோல் (misoprostol )மற்றும் டைநோப்ரோஸ்டோனில் (dinoprostone) ஒரேமாதிரி இருந்தன.

வாய்வழி மிசோப்ரோஸ்டாலை (misoprostol) மருந்துபோலியுடன் ஒப்பிட்ட ஒன்பது சோதனைகள் (1,109 பெண்கள்), வாய்வழி மிசோப்ரோஸ்டால் (misoprostol) பிரசவத்தை தூண்ட மருந்துப்போலியைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறைந்த சிசேரியன் விகிதம் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் குறைவான சேர்க்கை இருப்பதாகவும் காட்டியது. சில ஒப்பீடுகளின் ஆதாரங்களின் தரம் (எடுத்துக்காட்டாக வாய்வழி மிசோப்ரோஸ்டால் ஒப்பிடு யோனி மிசோப்ரோஸ்டால்), மிக வலுவாக இருந்தது ஆனால் பரிந்துரைகளின் வலிமை மற்ற ஒப்பீடுகளுக்கு குறைவாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: க. அழகுமூர்த்தி சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information