முதுகுதண்டு காயத்தினால் ஏற்படும் ஸ்பாஸ்டிசிட்டி பிடிப்பிற்கு கொடுக்கப்படும் மருந்துகளின்பலன்கள் என்ன என்பதை அறியபோதிய ஆதாரம் இல்லை

முதுகுதண்டு காயத்திற்கு பின் ஏற்ப்படும் முக்கிய பிரச்சினை, கைகால்களை நகர்த்தும்போது ஏற்ப்படும் ஸ்பாஸ்டிசிட்டி எனப்படும் இறுக்கமாகும். இசிவுகளும் (spasms) கூட ஏற்படலாம். இவை இவர்களுக்குவலி, மற்றும் தசை பிரச்சினைகளைக் கொடுப்பதோடு இவர்களை தனியாக இயங்கவிடாமல் தடுக்கின்றன மேலும் இதனால் தூக்கமின்மையும் ஏற்ப்படுகிறது. ஸ்பாஸ்டிசிட்டியை குறைக்கும் முயற்சியில் உடற்பயிற்சிகளும் மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை தசை முறுக்கையும் (muscle tone) தளர்த்தலாம். அவ்வாறு கொடுக்கப்படும் பலவகை மருந்துகளின் செயல்திறன்களை கண்டறிய நடத்தப்பட்டதிறனாய்வில் அதைக் கண்டறிய போதிய ஆதாரங்கள் இல்லை என்று அறியப்பட்டது. அதனால் இதை அறியமேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றும் அதை எவ்வாறு நடத்தவேண்டும் என்றும் திறனாய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர. ரவி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information