குறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான உடற்பயிற்சி சிகிச்சை

நாள் பட்ட முதுகு வலி உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை, வலியை குறைப்பது மற்றும் செயல்திறனை அதிகரிப்பதில் சிறிதளவு பயன் அளிக்கிறது,குறிப்பாக மருத்துவரின் ஆலோசனை நாடுபவர்களின் மத்தியில் இது காணப்படுகிறது. ஓரளவு கடுமையான(subacute) முதுகு வலி உள்ளவர்களுக்கு படிப்படியான செயல் பயிற்சி திட்ட சிகிச்சை,வருகையின்மையை குறைக்கிறது.மற்ற சிகிச்சை முறைகளின் பயன் குறித்து எந்த தெளிவான ஆதாரமும் இல்லை கடுமையான(acute) முதுகு வலி உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை அல்லது மற்ற சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டாலும் அல்லது எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவிட்டாலும் பயன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: பா. அம்பிகை மற்றும் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information