முடக்குவாதத்திற்கான கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள் மற்றும் போலி சிகிச்சை மற்றும் ஸ்டீராய்டற்ற அழற்சி-நீக்கி மருந்துகளின் ஒப்பீடு

முடக்குவாதம் கொண்ட நோயாளிகளில், குறுகிய-கால குறைந்தளவு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள் மற்றும் போலி சிகிச்சை மற்றும் ஸ்டீராய்டற்ற அழற்சி-நீக்கி மருந்துகளின் ஒப்பீடு

கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள் வீக்கத்தை குறைக்கும், ஆனால், அதிக மருந்தளவுகளில் முடக்கு வாதத்தின் அறிகுறிகள் மேல் பெருவாரியான விளைவை உண்டாக்கும். இதின் நீண்ட-கால பயன்பாட்டில் ஆபத்தான பாதக விளைவுகள் உள்ளதால், இவை தற்காலிகமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறைந்தளவு கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள் மிகவும் திறன் கொண்டவை என்று இந்த திறனாய்வு கண்டது. அவை, வழக்கமான முடக்குவாத மருந்துகளான ஸ்டீராய்டற்ற அழற்சி-நீக்கி மருந்துகளைக் காட்டிலும் அதிக திறன் கொண்டவையாக உள்ளன. எனினும், குறிப்பாக, எலும்பு முறிவுகள் மற்றும் தொற்றுகள் அபாயம் போன்ற தீங்குகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information