எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட நபர்களில், ஐசோனியாசிட் கொண்டு சிகிச்சையளிக்கப்படும் வெளிப்படாத காசநோய் (டிபி) செயல்படும் டிபி உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.

காசநோயால் (டிபி) பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் டிபி-யின் அறிகுறிகளை பெறுவதில்லை. இது, வெளிப்படாத டிபி என்று அழைக்கப்படும். எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட மக்கள், டிபி-யை பெறுவதற்கு அதிகமான அபாயத்தை கொண்டுள்ளனர், மற்றும் 30% வெளிப்படாத டிபி கொண்ட எச்ஐவி பாதிக்கப்பட்ட மக்கள், காலப்போக்கில் செயல்படும் டிபி-யை பெறுவர். இது, காலத்திற்கு முந்தைய இறப்பிற்கான அதிகரித்த அபாயத்திற்கு வழி நடத்தும். எச்ஐவி மற்றும் டிபி இரண்டாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஐசோனியாசிடை பயன்படுத்தும் போது, செயல்படும் டிபி உருவாகுவதின் அபாயம் குறைகிறது என்று கிடைக்கப்பெற்ற மருத்துவ சோதனைகளின் இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு கண்டது. பொதுவாக, வெளிப்படாத டிபி-க்கு ஐசோனியாசிடை ஆறு முதல் 12 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால், ஒரு அனுகூலமான சிகிச்சை காலம், எச்ஐவி கொண்ட மக்களுக்கான சிறந்த சிகிச்சை நடப்பு, மற்றும் குறிப்பாக, எச்ஐவி மருந்துகளுடன் கூட்டாக ஒரு சிறந்த சிகிச்சை நடப்பு ஆகியவற்றை காட்ட அதிகமான ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information