புற்று நோய் கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான முறைக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஞ்சை நீக்கி மருந்தூட்டல்

வேதிச்சிகிச்சை அல்லது ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்ற புற்று நோய் நோயாளிகள் பூஞ்சை தொற்றுகளின் அபாயத்தில் இருப்பர். அவை உடல் முழுவதும் பரவும் போது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, குறைந்தளவு வெள்ளை நிற உயிரணுக்கள் எண்ணிக்கை (நியூட்ரோபனியா) கொண்ட நோயாளிகள் அபாயத்தில் இருப்பர். ஒரு வழக்கமான தடுப்பு நடவடிக்கையாக, அல்லது காய்ச்சலின் அபாயத்தில் மக்கள் இருக்கும் போது, பெரும்பாலும் பூஞ்சை நீக்கி மருந்துகள் கொடுக்கப்படும். நரம்பு வழி வழங்கப்படும் அம்போடெரிசின் பி இறப்புகளின் எண்ணிக்கைகளை குறைக்கக் கூடும் என்று இந்த திறனாய்வு கண்டது. அம்போடெரிசின் பி, ஃப்ளுகோனாசோல் மற்றும் ட்ராகோனாசோல் என்ற மூன்று மருந்துகள் பூஞ்சை தொற்றுகளை குறைத்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information