போட்காஸ்ட்: வேலையின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான பணியிட சிகிச்சை தலையீடுகள்

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து  சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.

அநேக மக்கள் தங்களின் உடலியக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெற கூடும்.அதற்கு ஒரு வழி, வேலை நேரத்தின் போது உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகளின் மீதான ஆதாரத்தை ஜனவரி 2015ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு சோதித்தது. இந்த திறனாய்வில் புதிய ஆய்வுகள் இணைக்கப்பட்டு மார்ச் 2016ல் புதுப்பிக்கப்பட்டது.