வேலை நேரத்தில் உட்கார்தலை குறைக்கும் பணியிட தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் நேரத்தின் அளவு ஏன் முக்கியமாக கருதப்படுகிறது?

சமீபகாலமாக,வேலையில் உடல்ரீதியான செயலற்றநிலை,குறிப்பாக உட்கார்ந்து வேலை செய்வது அதிகமாகி இருக்கிறது. அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் உடற்பருமன், இருதயநோய், பக்கவாதம் மற்றும் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் அதிகமாகும் அபாயம் அதிகரித்துள்ளது. பணி செய்யும் நேரத்தில் உட்கார்ந்து வேலை செய்வதை குறைக்கும் முறைகள், உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதில், பயன் அளிக்குமா என்பது தெளிவாக்கப்படவில்லை

ஆய்வு நோக்கம்

உட்கார்ந்து வேலை செய்யும் நேரத்தை குறைக்கும் வழிமுறைகளால் பயன் இருக்கிறதா என்று அறிய நாங்கள் விரும்பினோம். நாங்கள் ஜூன் 2 2015 வரை பல்வேறு தரவுத்தளங்களில் உள்ள ஆராய்ச்சிகளை தேடினோம்.

என்ன ஆராய்ச்சிகளை இந்த திறனாய்வு கண்டு அறிந்தது?

உயர் வருவாய் நாடுகளில் இருந்து இருபது ஆய்வுகளில் மொத்தம் 2174 பங்கேற்பாளர்கள் நாம் கண்டறிந்தோம். ஒன்பது ஆய்வுகள் பணியிடத்தில் உடல் மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்தது,பணியிட கொள்கை மாற்றங்கள் குறித்து நான்கு ஆய்வுகள் மதிப்பீடு செய்தன, ஏழு ஆய்வுகள் தகவல் மற்றும் ஆலோசனை தலையீடுகள் மதிப்பீடு செய்தன மற்றும் ஒரு ஆய்வு உடல் பணியிட மாற்றங்கள் மற்றும் தகவல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை மதிப்பீடு செய்தது.

உட்கார்ந்து மற்றும் நிற்கும் மேசையின் விளைவு

உட்கார்ந்து மற்றும் நிற்கும் மேசைகள் மாத்திரம் வேலையின் பொழுது உட்காரும் நேரத்தை ஒரு நாளில் அரை மணி முதல் 2 மணி நேரம் வரை குறைக்கும். உட்கார்ந்து மற்றும் நிற்கும் மேசையுடன் தகவல் மற்றும் கருத்துரை வழங்கல் சேர்த்து வழுங்கும் போதும் உட்காரும் நேரம் அதே விகிதத்தில் குறைந்தது. உட்கார்ந்து மற்றும் நிற்கும் மேசைகள் மொத்த உட்காரும் நேரத்தை குறைக்கும் (வேளையில் இருக்கும் பொழுதும் வெளியே வேலை செய்யும் போதும்) மற்றும் அத்தியாயங்களில் காலம் 30 நிமிடமோ அதற்கு மேல உள்ள காலம் வரை குறைகிறது.

செயலில் பணிநிலையத்தின் திறன்

ஓடுபொறி மேசையுடன் ஆலோசனை வழங்கல் சேர்த்து வழங்குதல்,எந்த தலையீடும் இல்லாமையோடு ஒப்பிடுகையில் வேலை நேரத்தில் உட்கார்தலை குறைத்தது. உதைத்தோட்டல் (Pedalling) பணிநிலையத்துடன் தகவல் அளிப்பது தகவல் மட்டும் அளிப்பதுடன் ஒப்பிடும்போது பணிநேரத்தில் உட்காருவதை குறைக்கவில்லை.

இடைவேளையின் போது நடப்பதின் பயன்

443 பங்கேற்பாளர்கள்கொண்ட இரண்டு ஆய்வுகளில், இடைவேளையின் போது நடைபயிற்சி அறிமுகம் செய்தபோது உட்காரும் நேரத்தின் அளவை மாற்ற முடியவில்லை.

தகவல் மற்றும் ஆலோசனையின் விளைவு

இரண்டு ஆய்வுகளில் தொழில்சார்ந்த மருத்துவரின் ஆலோசனைகளால் உட்காரும் நேரம் 28 நிமிடங்கள் குறைந்திருந்தது. மற்றொரு ஆய்வில் விழிப்புணர்வுடன் முழு மனதையும் ஒருமுகப்படுத்தும் பயிற்சி பணிநேரத்தில் உட்காருவதில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆலோசனை வழங்கல் வேலையில் ஈடுபாட்டை கணிசமான அளவு அதிகரிக்கவில்லை.

2 ஆராய்ச்சிகளில் கணினி மென்பொருள் மூலம் தூண்டி விடுதல் உட்காரும் நேரத்தை குறைக்கவில்லை. எந்த ஒரு தலையீடும் எடுத்துக் கொள்ளாதவர்களை ஒப்பிடுகையில், கணினி மென்பொருள் மூலம் தூண்டி விடுதல் உட்காரும் நேரத்தை 55 நிமிடம் குறைத்தது என்று வேறு ஒரு ஆய்வு காட்டியது. எழுந்து நிற்க தூண்டுதல் செய்வது, அடி எடுத்து வைக்க தூண்டுவதை ஒப்பிடும்போது 14 நிமிடம் உட்காரும் நேரத்தை குறைக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது. கணினி மென்பொருள் மூலம் தூண்டி விடுதல் 30 நிமிடமோ அல்லது கூடவோ இருக்கும் உட்காரும் தொடர் நிகழ்வுகளை மாற்றாது.

பல பிரிவுகளுக்கான குறுக்கீடுகள்

பல பிரிவுகளுக்கான குறுக்கீடுகள் ஒருங்கிணைந்து அளிக்கப்படும் போது 12 வாரம் மற்றும் ஆறு மாததொடர்கண்காணிப்பில் வேலை நேரத்தில் உட்கார்தலை குறைத்தது. மேலும் 12 மாத தொடர் கண்காணிப்பின் போது கட்டுப்பாட்டு குழுவுக்கும் தலையீடு குழுவுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

முடிவுரைகள்

பெரும்பாலான தலையீடுகளுக்கு ஆதாரத்தின் தரம் மிக குறைவு முதல் குறை வானது வரை இருந்தது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த பங்கேற்பாளர்களை கொண்டிருத்தல் மற்றும் சரிவர வடிவமைக்க படாத ஆய்வுகள். தற்போது, உட்கார்ந்தும் நின்றும் வேலை செய்யகூடிய மேஜைகள் குறைந்த காலத்தில் பணியில் உட்காரும் நேரத்தை குறைக்கும் என கூறுவதற்கு மிகவும் தரம் குறைந்த ஆதாரங்களே உள்ளனஎன நாங்கள் முடிவுக்கு வந்தோம். மற்ற விதமான தலையீடுகள் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை. வேலை நேரத்தில் உட்கார்தலை குறைக்க உதவும் பலவித பணியிட தலையீடுகளின் நீண்டகால திறனை மதிப்பிட நமக்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரி கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு