உடற்பயிற்சிக்குரிய பயன்கள் ஒரு பக்கம் இருக்க, அதின் வரவேற்கப்படாத விளைவுகளில் ஒன்று தசை நோவாக இருக்கும், ஆதலால் இதனை தடுப்பதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்குரிய வழிகள் தொழில் முறை அல்லது தொழில் முறை சாராத தடகள வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கக் கூடும். செப்டம்பர் 2015-ல் ரக்பி உலக கோப்பை போட்டி தொடங்கிய போது, முழு-உடல் குளிர் சிகிச்சை அல்லது உச்ச அளவு குளிர் காற்றை படவைத்தல் என்ற ஒரு சிகிச்சை தலையீட்டின் ஆதாரத்தை ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது. யுகே-வில் உள்ள யுனிவெர்சிட்டி ஆப் போர்ட்ஸ்மௌத்-திலிருந்து, இந்த திறனாய்வு ஆசிரியர்களில் ஒருவரான ஜோசப் கோஸ்டெல்லோ, இது பற்றி மேலும் கூறுகிறார்.