உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு முழு-உடல் குளிர் சிகிச்சை

பின்புலம் மற்றும் திறனாய்வின் நோக்கம்

தாமதமாக தொடங்கும் தசை நோவு என்பது, உயர்-தீவிர அல்லது பழக்கமற்ற உடற்பயிற்சிக்கு பின்னர் அனுபவிக்கப்படும் தசை வலி, மென்மைத்தன்மை, மற்றும் விறைப்புத்தன்மை போன்றவற்றை விவரிக்கும். உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு மற்றும் மீட்சியை மேம்படுத்துவதற்கு அநேக சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய சிகிச்சைகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று, முழு-உடல் குளிர் சிகிச்சை ஆகும். ஒரு சிறப்பு சிற்றறையில் அல்லது சிற்றரங்கில் உச்ச அளவு வறண்ட காற்றிற்கு (-100 டிகிரி சி-க்கும் குறைவாக) ஒரு தடவை அல்லது தொடர்ச்சியாக, ஒவ்வொரு சமயமும் இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை வெளிப்பட வைத்ததலை இது உள்ளடக்கும். முழு-உடல் குளிர் சிகிச்சையை பயன்படுத்தக் கூடிய மக்களில் அது தசை நோவை குறைத்ததா, மீட்சியை மேம்படுத்தியதா மற்றும் பாதுக்காப்பானதா என்பதை அறிய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டது.

தேடலின் முடிவுகள்

முழு-உடல் குளிர் சிகிச்சையை, ஓய்வு அல்லது சிகிச்சையின்மை போன்ற ஒரு கட்டுப்பாட்டு சிகிச்சை தலையீட்டோடு அல்லது குளிர் நீரில் மூழ்குவித்தல் போன்ற மற்றொரு செயல்மிக்க சிகிச்சை தலையீட்டோடு ஒப்பிட்ட ஆகஸ்ட் 2015 வரையான ஆய்வுகளுக்காக நாங்கள் மருத்துவ தரவுத் தளங்களைத் தேடினோம். நான்கு சிறிய ஆய்வுகளை நாங்கள் கண்டோம். இவை, மொத்தம் 64 உடல் சுறுசுறுப்பு மிக்க இளம் வயது வந்தவர்களின் முடிவுகளை அறிக்கையிட்டு இருந்தன. அனைத்து ஆய்வு பங்கேற்பாளர்களும் ஆண்களாக இருந்தனர். முழு-உடல் குளிர் சிகிச்சையின் வகை, வெப்ப நிலை, கால அளவு, மற்றும் அடுக்கு நிகழ்வு மற்றும் தசை நோவை தூண்டுவதற்கான உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஆய்வுகள் வெகுவாக வேறுப்பட்டிருந்தன. இரண்டு ஒப்பீடுகள் இருந்தன: ஒரு கட்டுப்பாட்டு சிகிச்சை தலையீட்டோடு ஒப்பிடப்பட்ட முழு-உடல் குளிர் சிகிச்சை; மற்றும் தூர-அகச்சிவப்பு சிகிச்சையோடு ஒப்பிடப்பட்ட முழு-உடல் குளிர் சிகிச்சை

முக்கிய முடிவுகள்

அனைத்து நான்கு ஆய்வுகளும், முழு-உடல் குளிர் சிகிச்சையை செயலற்ற ஓய்வு அல்லது சிகிச்சையின்மையோடு ஒப்பிட்டன. இவை, முழு-உடல் குளிர் சிகிச்சையானது உடற்பயிற்சிக்கு பின் 1, 24, 48 மற்றும் 72 மணி நேரங்களில் தசை நோவை (ஓய்வின் போது வலி ஏற்படுதல்) குறைக்கக் கூடும் என்பதற்கு சில ஆதாரத்தை அளித்தன. எனினும், இந்த ஆதாரம், முழு-உடல் குளிர் சிகிச்சை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது அல்லது வலியை மேலும் அதிகப்படுத்தும் என்ற சாத்தியத்தை உள்ளடக்கக் கூடும். முழு-உடல் குளிர் சிகிச்சை, 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தும் என்பதற்கு சில வலுவற்ற ஆதாரம் உள்ளது. இந்த நான்கு ஆய்வுகளில், பாதகமான நிகழ்வுகள் பற்றி எந்த பதிவும் இல்லை மற்றும் அதற்கான கண்காணிப்பும் இல்லை.

முழு-உடல் குளிர் சிகிச்சையை தூர-அகச்சிவப்பு சிகிச்சையோடு ஒப்பிட்ட ஒரு மிக சிறிய ஆய்வானது, சிகிச்சைக்கு பின்னர் ஒரு மணி நேரத்தில் குறைந்த மட்ட தசை நோவை பதிவு செய்து இருந்தது.

சான்றின் தரம்

அனைத்து நான்கு ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளின் நம்பகத்தன்மையை குறைக்கக் கூடிய அம்சங்களை கொண்டிருந்தன. அனைத்து விளைவுகளுக்கும், ஆதாரத்தின் தரம் மிக குறைவாக இருந்தது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆதலால், முடிவுகள் மிகவும் நிச்சயமற்று உள்ளன மற்றும் எங்களின் முடிவுகளை மாற்றும் வகையில் மேற்படியான ஆராய்ச்சி ஆதாரத்தை வழங்கக் கூடும்.

முடிவுரைகள்

வயது வந்தவர்களில் உடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு முழு-உடல் குளிர் சிகிச்சையின் பயன்பாட்டை ஆதரிப்பதற்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரம் பற்றாக்குறையான அளவில் உள்ளது. மேலும், முழு-உடல் குளிர் சிகிச்சையின் சிறந்த பரிந்துரைப்பு மற்றும் அதின் பாதுகாப்பு பற்றி தெரியவில்லை,

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information