இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில், இறப்பிற்கும் மற்றும் நோயுற்ற நிலைக்கும், துளைக்கக் கூடிய பூஞ்சை தொற்றுகள் முக்கிய காரணங்களாகும். இவற்றை தடுப்பதற்கு பூஞ்சை நீக்கி முகமை பொருள்களின் விளைவுகளை பற்றி ஜனவரி 2016-ல் வெளியான ஒரு புதுப்பிக்கப்பட்ட காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது.