Skip to main content

நாள்பட்ட நரம்பு சார்ந்த வலி உடைய பெரியவர்களுக்கு காபாபேண்டின்

அடிப்படை கருத்து

தோல் கொப்புளங்கள்(shingles ) அல்லது நீரிழிவு நோய்க்குப் பின் உண்டாகும் மிதமான நரம்பு சார்ந்த வலிக்கு, ஒருநாளைக்கு 1200 மி .கி . வாய்வழி காபாபேண்டின் ஒரு சிலருக்கு முக்கிய வலி நிவாரணியாக இருக்கும் என்பதற்கு மிதமான தரம் கொண்ட ஆதாரம் உள்ளது.

பின்னணி

சேதமடைந்த நரம்புகளால் நரம்பு சார்ந்த வலி உண்டாகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களிலிருந்து (உதாரணத்திற்கு, கீழே விழுதல் அல்லது ஒரு வெட்டு காயம் அல்லது ஒரு முழங்கால் மூட்டு வாதம்)எடுத்து செல்லப்படும் தகவல்கள் , ஆரோக்கியமான நரம்புகள் வழியாக கடத்தி செல்லப்படும் வலி தகவல்களிலிருந்து வேறுபட்டிருக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளிலிருந்து வேறுபட்டு நரம்பு நோய் வலிக்கு வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். சிலநேரங்களில் நரம்பு நோய் வலி கொண்ட சிலருக்கு , மனச்சோர்வு அல்லது வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் மருந்துகள் மிகவும் திறன் மிக்கதாக இருக்கக் கூடும். இதில் ஒன்று காபாபேண்டின். உயர் நிலை வலி நிவாரணம் மற்றும் பக்க விளைவுகள்இல்லாமல் மருந்து உட்கொள்வதை தொடர்ந்து மேற்கொண்டு மேலான நிலையில் வைத்திருப்பதே நல்ல விளைவு என்று வரையறைக்கப்படுகிறது .

ஆய்வு பண்புகள்

மே 2015-ல், நரம்பு நோய் வலி சிகிச்சைக்கு வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகளை பயன்படுத்திய மருத்துவ சோதனைகளை நாங்கள் தேடினோம். தேர்வு அடிப்படைக் கூறுகளைப் பூர்த்திசெய்த 5914 பங்கேற்பாளர்களை கொண்ட 37 ஆராய்ச்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். 4 முதல் 12 வாரங்கள் வரைஆராய்ச்சிகள் நடந்தப்பட்டன. பெரும்பாலுமான ஆராய்ச்சிகள் நரம்பு சார்ந்த வலி உள்ளவர்களுக்கு் பயன் உள்ள விளைவுபயன் தருகிறது என்று தெரிவித்தது. சிங்கிள்ஸ்க்கு பின் உண்டாகும் வலி மற்றும் நீரிழிவு நோய் காரணமாக உண்டாகும் நரம்பு சேத வலி அடிப்படையிலே இந்த முடிவுகள் அமைந்தன.

முக்கிய முடிவுகள்

ஷிங்கில்ஸ்க்கு பின் வரும் வலிக்கு காபாபேண்டின் உட்கொண்டவர்களில் 10இல் 3வருக்கும் மருந்தற்ற குளிகை உட்கொண்டவர்களில் 10இல் 2 பேருக்கும் வலி பாதியாகவோ அல்லது கூடுதலாகவோ குறைந்தது. காபாபேண்டின் உட்கொண்டவர்களில் 10இல் 5பேருக்கும் மருந்தற்ற குளிகை உட்கொண்டவர்களில் 10இல் 3 பேருக்கும் வலி மூன்றில் ஒரு பங்காகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ குறைந்தது. நீரிழிவு நோயினால் வரும் வலிக்கு காபாபேண்டின் உட்கொண்டவர்களில் 10இல் 4 பேருக்கும் மருந்தற்ற குளிகை உட்கொண்டவர்களில் 10இல் 2 பேருக்கும் வலி பாதியாக குறைந்தது. காபாபேண்டின் உட்கொண்டவர்களில் 10இல் 5பேருக்கும் மருந்தற்ற குளிகை உட்கொண்டவர்களில் 10இல் 4 பேருக்கும் வலி மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. மற்ற நரம்பு சார்ந்த வலிகளுக்கு நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை.

மருந்தற்ற குளிகையோடு ஒப்பிடுகையில் (10இல் 5) காபாபேண்டின்னிக்கு பக்க விளைவுகள் அதிகபடியாக வரும் (10 இல் 6). காபாபேண்டின் உட்கொண்டவர்களில் 10இல் ஒருவருக்கு கிறுகிறுப்பு, தூக்கக் கலக்கம், தண்ணீர் தக்கவைத்தல் (water retention) மற்றும் நடப்பதில் பிரச்சினை போன்றவை நேர்ந்துள்ளது. காபாபேண்டின் மற்றும் மருந்தற்ற குளிகைக்குஉட்கொண்டவர்களிடையே கடுமையான பக்க விளைவுகள் பொதுவாக வருவதில்லை. காபாபேண்டின் உட்கொண்டவவர்கள் சற்று அதிகமாகமாணவர்கள் பக்க விளைவுகள் காரணமாக மருந்தை நிறுத்தினர்.

நாள்பட்ட நரம்பு சார்ந்த வலி உடைய சிலருக்கு காபாபேண்டின் உதவக்கூடும். ஆனால் யாருக்கு நன்மை பயக்கும் என்று முன்னதாகவே தெரிந்து கொள்ள சாத்தியம் இல்லை. இன்றைய நிலையில் அறிந்துகொண்டபடி குறுகிய கால ஆய்வுகளே சொல்வதற்கு சிறந்த வழி வழி என அறிவுறுத்துகிறது .

ஆதாரங்களின் தரம்

ஆதாரம் பொதுவாக மிதமான தரம் கொண்டவையாக இருந்தது இதன் அர்த்தம் இந்த விளைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நன்றாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. இந்த விளைவு கணிசமாக வேறுபடுவதற்கான வாய்ப்பு மிதமானதாக இருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Citation
Wiffen PJ, Derry S, Bell RF, Rice ASC, Tölle TR, Phillips T, Moore RA. Gabapentin for chronic neuropathic pain in adults. Cochrane Database of Systematic Reviews 2017, Issue 6. Art. No.: CD007938. DOI: 10.1002/14651858.CD007938.pub4.