தொற்றுகளை தவிர்க்க, புண்களை சுத்தப்படுத்துவதற்கு அடிக்கடி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவை, குழாய் தண்ணீர், காய்ச்சி வடிக்கட்டிய தண்ணீர், குளிருட்டப்பட்ட கொதிக்க வைத்த தண்ணீர், அல்லது உப்பு தண்ணீர் என்று இருக்கலாம். குறுகிய-கால புண்களை சுத்தப்படுத்த குழாய் தண்ணீரை பயன்படுத்துதல் தொற்று நிகழ்வுகளை அதிகரிக்கவில்லை; எனினும், சுத்தப்படுத்தாமல் இருப்பதை விட, சுத்தப்படுத்துவது சிறப்பாக இருக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. குழாய் தண்ணீர் உயர்ந்த தரம் கொண்டது (குடிக்க தகுதி வாய்ந்தது) என்று திறனாய்வு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்; அது கிருமியற்ற தண்ணீர் அல்லது உப்பு தண்ணீர் போன்ற பிற முறைகளை போன்று சிறப்பாக இருக்கும் (மற்றும் செலவு-குறைந்ததாக), ஆனால் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.