அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் ஆபத்தானதாகும், மற்றும் அதிக மது பயன்பாட்டினால் மிக முக்கியமான வழிகளில் தீங்கு ஏற்படுத்துவது காயங்கள் ( தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும்) ஆகும். 'பிரச்னைக்குரிய குடிகாரர்கள்' என்று அறியப்படும் மக்களில், இத்தகைய காயங்களை குறைப்பதற்கு அவர்களுடன் இணைந்து செயல்பட ஏதேனும் வழிகள் உள்ளனவா? காயங்களை குறைப்பதற்கு பிரச்னைக்குரிய குடிகாரர்களுடன் இணைந்து செயல்படும் திட்டங்களை அறிக்கையிட்ட 17 ஆய்வுகளை இந்த திறனாய்வு ஆசிரியர்கள் கண்டனர். பலவிதமான அணுகுமுறைகள் மதிப்பிடப்பட்டன, ஆரோக்கிய ஊழியர்களால் அளிக்கப்பட்ட சுருக்கமான ஆலோசனை என்பது மிக பொதுவாக அளிக்கப்பட்டது. பிரச்னைக்குரிய குடிகாரர்களில் நடவடிக்கையில் ஈடுபடுதல், காயங்கள் மற்றும் காயங்களுக்கு வழி வகுத்த நிகழ்வுகளை (கீழே விழுதல்கள், மோட்டார் வாகன மோதல்கள், மற்றும் தற்கொலை முயற்சிகள்) குறைப்பதில் திறன் கொண்டவையாக இருந்தன என்று இந்த ஆய்வுகளிலிருந்து ஆதாரம் பரிந்துரைக்கிறது. எனினும், தலையீடுகளின் திறன் அளவை துல்லியமாக மதிப்பிடவும் மற்றும் எந்த வகையான திட்டம் சிறப்பாக வேலை செய்யும் என்பதையும் கணிக்கிட அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.