Skip to main content

இளம் வயதினரின் கீழ் அவயங்களிலுள்ள எலும்புகளில் (lower limbs) ஏற்படும் தகைவு எதிர்வினைகள் (stress reactions) மற்றும் தகைவு எலும்பு முறிவுகள்(stress fractures) ஆகியவற்றைத் தடுக்கவும் , சிகிச்சை அளிக்கவும் உள்ள குறுக்கீடுகள்

தகைவு எலும்பு முறிவுகள் (stress fracture) என்பது அளவுக்கு மீறிய பயன்பாட்டு காயங்களுள் ஒரு வகை . அவை மிகவும் வலி மற்றும் வலுவிழப்பை உண்டுபண்ணும். கீழ் அவய தகைவு எலும்பு முறிவுகள் இராணுவ பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், குறிப்பாக நீண்ட தூரம் ஓட்டப்பந்தய வீரர்களிடம் பொதுவாக உள்ளது. காலணியில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பயிற்சி கால அட்டவணை மாற்றங்கள் உள்ளிட்டவை தகைவு எலும்பு முறிவுகளை தடுக்கும் நடவடிக்கை முறைகளில் அடங்கும். இராணுவ பயிற்சியின் போது தகைவு எலும்பு முறிவுகளை தடுக்க அதிர்ச்சித் தாங்கி மூடு காலணி (boots) உதவும் என்பதற்கு நாங்கள் சில சான்றுகளைக் கண்டோம். அதை பயன்படுத்த சிறந்த வடிவமைப்பு என்ன என்பது தெளிவாக இல்லை. தகைவு எலும்பு முறிவுகளுக்கு பொதுவாக நீண்ட காலம் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் ஒரு சிகிச்சையாக உள்ளது . காற்றடைத்த குழாய்ப்பட்டை முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள எலும்பில் (tibial) தகைவால் ஏற்படும் எலும்பு முறிவு வேகமாக குணமடைய உதவலாம் என்பதற்கு சில சான்றுகளை நாங்கள் கண்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Citation
Rome K, Handoll HHG, Ashford RL. Interventions for preventing and treating stress fractures and stress reactions of bone of the lower limbs in young adults. Cochrane Database of Systematic Reviews 2005, Issue 2. Art. No.: CD000450. DOI: 10.1002/14651858.CD000450.pub2.