Skip to main content

ஆஸ்துமாவின் கடுமையான தீவிரமடைதலுக்கு பிறகு அவ்வாறு மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான கார்ட்டிக்கோ-ஸ்டீராய்டுகள்

ஒரு ஆஸ்துமா பாதிப்பின் போது, தசை இறுக்கபிடிப்புகள் மற்றும் வீக்கத்தினால் காற்றுக் குழாய்கள் (நுரையீரலுக்கு செல்லும் காற்று வழிகள்) சுருங்கும். மூச்சுக் குழாய்த் தளர்த்திகளை (பிராங்கோ-டைலேட்டர்கள், நுரையீரல்கள் மற்றும் காற்றுக் குழாய்ககளின் விரிவை திறப்பதற்கு பயன்படுத்தப்படும் மூச்சிழுப்பு நிவாரணிகள்) இறுக்க பிடிப்புகளுக்கும் மற்றும் கார்ட்டிக்கோ-ஸ்டீராய்டுகளை வீக்கத்திற்கும் பயன்படுத்தலாம். எனினும், ஆஸ்துமா சிகிச்சையைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை விட்டு வெளியேற்றப்படும் அநேக மக்களுக்கு பத்து நாட்களுக்குள் அது மீண்டும் ஏற்படக் கூடும். சிகிச்சை வெளியேற்றத்திற்குப் பிறகு, குறுகிய-காலத்திற்கு கார்ட்டிக்கோ-ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொள்வது, எந்த பெரிய பாதகமான விளைவுகளும் அல்லாது, மீண்டும் ஏற்படும் சாத்தியங்களை குறைத்து மற்றும் மூச்சிழுப்பு நிவாரணிகள் பயன்பாட்டு தேவை ஏற்படுவதையும் குறைக்கிறதென 374 மக்களை உள்ளடக்கிய ஆறு சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு நன்மைகள் நீடித்திருக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Citation
Rowe BH, Spooner C, Ducharme F, Bretzlaff J, Bota G. Corticosteroids for preventing relapse following acute exacerbations of asthma. Cochrane Database of Systematic Reviews 2007, Issue 3. Art. No.: CD000195. DOI: 10.1002/14651858.CD000195.pub2.