ஆரோக்கிய பராமரிப்பு தலையீடுகளின் சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளுடைய திட்டமிட்ட திறனாய்வுகளில், விளைவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை தேர்ந்தெடுத்து சேர்ப்பது மற்றும் அறிக்கையிடுதல் காரணமாக ஏற்படும் ஒரு தலை சார்பு நிலை

குறிப்பிட்ட ஒரு ஆராய்ச்சி கேள்விக்கு பதிலளிக்க, ஒரு திறனாய்வு, பல ஆய்வுகளில் இருந்து சான்றுகளை தொகுத்து அளிக்கும். (எ.கா. ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய நிலைக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை தலையீட்டின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்ன?). பெரும்பாலும், முறைப்படுத்தபட்ட திறனாய்வு ஆசிரியர்கள், அவர்களின் ஆராய்ச்சி கேள்விக்கு பதிலளிக்க அனேக விளைவுகளை பதிவிட முடியும் (எ.கா. தசையெலும்பு மருத்துவ நிலைகள் உள்ள நோயாளிகளுக்கு வலி, இயலாமை மற்றும் வாழ்க்கைத் தரம்) மற்றும் ஒரு குறிப்பிட விளைவிற்கு பல்வேறு விதமான கண்டுப்பிடிப்புகள் இருக்கக் கூடும் ( எ. கா. ஒரு ஆய்வு, வலியை நான்கு நேர புள்ளிகளில் மூன்று விதமான அளவீட்டில் பதிவு செய்யலாம்). ஒரு முறையான திறனாய்வில் எந்த விளைவுகளை ஆராயலாம் என்பதை தகுதியுள்ள ஆய்வுகளில் உள்ள அவ்விளைவுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுத்தால், அது ஒரு தலை சார்பிற்கு வழிவகுக்கும். அதே சமயம், முடிவுகளை அடிப்படையாக கொண்டு, ஒரு முறையான திறனாய்வில் எந்த விளைவுகளை அறிக்கையிடலாம் மற்றும் அவற்றை எவ்விதம் அறிக்கையிடலாம் என்று முடிவெடுத்தால், அது திறனாய்வு பயனர்களை தவறாக வழிநடத்தக் கூடும்.

முறையான திறனாய்வுகளில் சேர்க்கப்பட்ட முடிவுகள் மற்றும் விளைவுகளை அறிக்கையிடல் ஆகியவற்றை ஆராய்ந்த ஆய்வுகளின் முடிவுகளை, இந்த செயல்முறையியல் திறனாய்வு சுருக்கமாக அளிக்கிறது. மின்னணு ஆதார நூற் தரவுத்தளங்களில், மே 2013 வரைக்குமான வரிசைப்படுத்தப்படுத்தப்பட்ட ஆய்வுகளை நாங்கள் தேடினோம். நாங்கள் ஏழு ஆய்வுகளை சேர்த்தோம் மற்றும், முறையான திறனாய்வுகளில் ஆராயப்பட்ட மற்றும் அறிக்கையிடப்பட்ட விளைவுகள், திறனாய்வின் செயல் நெறிமுறைக்கும் மற்றும் வெளியிடப்பட்ட திறனாய்விற்கும் இடையில் பெரும்பாலும் மாற்றப்பட்டது என்று கண்டறியப்பட்டது. இந்த மாற்றங்களைச் செய்ய முடிவெடுப்பதற்கு, அந்த சிகிச்சை விளைவு எவ்வாறு புள்ளியல்படி திருப்திகரமாக இருந்ததை பொறுத்து இருந்ததா என்பது தெளிவற்றதாக இருந்தது என்று நாங்கள் கண்டறிதோம். இத்தகைய உறவு இருந்ததா என்பதை உறுதிப்படுத்த அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது. மேலும், சில திட்டமிட்ட திறனாய்வுகள், திறனாய்வு சுருக்கத்தில் இருந்த மிக அனைத்து முக்கியமான விளைவுகளை தெரிவிக்கவில்லை என்று ஒரு ஆய்வு கண்டது. புள்ளியல் விவரப்படி மிக திருப்திக்கரமாக இருந்த விளைவுகள், மற்ற விளைவுகளைக் காட்டிலும், ஆய்வு சுருக்கத்தில் முழுமையாக பதிவிடப்பட்டன என்று ஒரு ஆய்வு கண்டது. நாங்கள் சேர்த்துள்ள ஆய்வுகள், 2009-க்கு முந்தைய திறனாய்வுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது. அண்மைக்கால திறனாய்வுகளில் சேர்க்கப்பட்டுள்ள முடிவுகள் மற்றும் அறிக்கையிடப்பட்ட விளைவுகளை ஆய்வு செய்ய புதிய ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information