சியாட்டிகாவிற்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs)).

திறனாய்வு கேள்வி

சியாட்டிகாயுள்ளவர்களுக்கு வலி குறைதல், ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் பக்க விளைவுகள்தொடர்பாக , ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளின் (நான்-ஸ்டீராய்ட்டல் ஆன்டி-இன்ப்லமேட்டரி ட்ரக்ஸ், NSAIDs) விளைவுகள் பற்றியதான ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். போலி மருந்து, பிற ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (NSAIDs), வேறு மருந்துகள் அல்லது மற்ற சிகிச்சை முறைகளுடன் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (NSAIDs)கள் ஒப்பிடப்பட்டது.

பின்னணி

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் உலகில் அதிகமாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்ஆகும் . அவை கீழ் முதுகு வலியுடன் சேர்ந்து கால்களுக்கும் பரவும் வலி(sciatica ) அல்லது அது இல்லாமல் கீழ் முதுகு வலி உள்ளவர்களுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஆய்வு பண்புகள்

நாங்கள் ஜூன் 2015 வரை வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத ஆய்வுகளை தேடினோம். ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்( NSAIDs)உடன் மருந்தற்ற குளிகை அல்லது வேறு மருத்துகளை ஒப்பிட்ட 1651 பங்கேற்பாளர்களை கொண்ட 10 ஆய்வுகளை சேர்த்தோம். இந்த ஆய்வுகளின் பங்கேற்பாளர்கள் 16 முதல் 75 வயது உடையவர்கள், அவர்கள் அனைவரும் தங்களுக்கு சயடிக்கா இருந்ததாக தெரிவித்தனர். இந்த ஆய்வுகளில் சில காலம், அதாவது முன்றுவாரங்கள் வரை மட்டுமே நோயாளிகள் சிகிச்சைக்கு பின்னர் தொடரப்பட்டார்கள்.

முக்கிய முடிவுகள்

சயடிக்கா வலியை குறைப்பதில் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்(NSAIDs) மருந்தற்ற குளிகைகள் அல்லது மற்ற மருந்துகளைவிட திறனானவை அல்ல. மற்ற மருந்துகள், மருந்தற்ற குளிகைகளுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த முன்னேற்றம் ஏற்படுத்துவதில் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்(NSAIDs) மருந்தற்ற குளிகைகள் அல்லது மற்ற மருந்துகளைவிட திறனானவை . ஆனால் சேர்க்கப்பட்ட ஆய்வுகளின்செயல்முறை தரம் குறைவாக இருந்தமையால் இந்த முடிவுகளை எச்சரிக்கையுடன் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மருந்தற்ற குளிகைகளுடன் ஒப்பிடுகையில் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்(NSAIDs) பக்க விளைவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. NSAIDs ஊக்கி அல்லா அழற்சி மருந்து(NSAIDs) களால் தீவிர பக்க விளைவுகள் வர வாய்ப்புஉள்ளத்தாலும், இந்த மருந்து அதிகமாக பரிந்துரைக்கப் படுவதாலும் , இதன் குறுகிய மற்றும் நீண்ட கால நன்மை மற்றும் நீண்ட கால ஆபத்து பற்றி அறிய பல்வேறு நோயாளிகள் குழுக்கள் இடையே செய்யப்படவேண்டும்.

முடிவுகளின் தரம்

மருந்தற்ற குளிகைகளை ஒப்பிடுகையில் NSAIDs திறனானது என்று மிக குறைவு முதல் குறைவான ஆதாரங்கள் இந்த திறனாய்வில் இருந்தமையால் இந்த முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information