இதயத்தமனி நோய் அபாயத்தை குறைப்பதற்காக நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைத்தலின் விளைவு

திறனாய்வு கேள்வி

நமது உணவிலிருந்து, தெவிட்டிய கொழுப்பை குறைப்பதன் மூலம் (விலங்கு கொழுப்பை தாவர எண்ணைகள், தெவிட்டாத கொழுப்பு பரவல்கள், மற்றும் அதிகமான மாவு உணவு வகைகள் ஆகியவற்றை கொண்டு மாற்றி பொருத்துதல்) ஆரோக்கியத்தின் மேலான விளைவுகளை நாங்கள் கண்டறிய விழைந்தோம்.

பின்புலம்

விலங்கு கொழுப்புகளை குறைப்பதன் மூலம் நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆரோக்கிய வழிகாட்டல் பரிந்துரை செய்கிறது. இந்த அறிவுரையை பின்பற்றுவதினால் இறப்பின் அபாயக் குறைப்பு, அல்லது இதயத் தமனி நோய் (இதய நோய் அல்லது பக்கவாதம்) ஆகியவற்றிற்கு வழிவகுக்குமா என்பதை பார்க்க, இருக்கும் அணைத்து ஆதாரத்தையும் நாங்கள் இணைக்க நாங்கள் விழைந்தோம்.

ஆய்வு பண்புகள்

தெவிட்டிய கொழுப்பை குறைப்பதன் பலனை, இறப்பு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்று நோய் ஆகிய ஆரோக்கிய விளைவுகள் மேல் இரண்டு வருடங்களுக்கு குறையாமல் நாங்கள் சோதனை செய்தோம். வயது வந்தவர்கள் (18 வருடங்கள் அல்லது அதற்கு மேல்) கொண்ட ஆய்வுகளை மட்டும் நாங்கள் பார்த்தோம். இவை, இதயத்தமனி நோய் கொண்ட அல்லது கொண்டிராத ஆண்கள் மற்றும் பெண்களை கொண்டிருந்தன. கடுமையான நோய் கொண்டிருந்த மக்கள் அல்லது பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோரை கொண்ட ஆய்வுகளை நாங்கள் சேர்க்கவில்லை.

முக்கிய முடிவுகள்

59,000 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த 15 ஆய்வுகளை நாங்கள் கண்டோம். இந்த ஆதாரம் மார்ச் 2014 வரை தற்போதையானது. இந்த திறனாய்வு, தெவிட்டிய கொழுப்பை குறைப்பது, 17% இதயத் தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கு வழி வகுத்தது,ஆனால் இறப்பு அபாயத்தின் மேல் எந்த விளைவுகளும் ஏற்படுத்தவில்லை என்று கண்டது. தெவிட்டிய கொழுப்புகளை, மாவு உணவுகள் மற்றும் புரதம் ஆகியவற்றை கொண்டு மாற்றி பொருத்துதல் மூலம் தெளிவான ஆரோக்கிய பயன்களை இந்த திறனாய்வு காணவில்லை. தெவிட்டிய கொழுப்புகளை, தெவிட்டாத கொழுப்புகள் கொண்டு மாற்றி பொருத்தி நாம் உண்ணும் கொழுப்பின் வகை மாற்றுவது, நமது இதயம் மற்றும் தமனி கோளாறுகளின் அபாயத்தை குறைத்து, நம்மை சிறப்பாக பாதுகாக்கும் என்று தெரிகிறது. அதிகமான தெவிட்டிய கொழுப்பு குறைப்பு, மற்றும் அதிகமான மொத்த இரத்த கொலஸ்ட்ரால் குறைதல், அதிகமான பாதுகாப்பு. தற்சமயம் ஆரோக்கியமாக இருக்கும் மக்கள், அதிகமான இதய நோய் அல்லது பக்கவாத அபாயத்தை கொண்டோர் (உதாரணத்திற்கு, உயர் இரத்த அழுத்தம், உயர் மொத்த இரத்த கொலஸ்ட்ரால், அல்லது நீரிழிவு நோய் கொண்ட மக்கள்) மற்றும் ஏற்கனவே இதய நோய் அல்லது பக்கவாதம் இருக்கும் மக்கள் ஆகியோர் பயனடைவர் என்று தெரிகிறது. பலனில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே தெளிவான வித்தியாசம் தெரியவில்லை.

சான்றின் தரம்

குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது தெவிட்டிய கொழுப்பை குறைப்பதை சோதித்த, ஏறக்குறைய 60,000 மக்களை உள்ளடக்கிய ஆய்வுகள் கொண்ட ஒரு பெரிய அளவிலான ஆதாரம் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வுகள், தெவிட்டிய கொழுப்பை பல் தெவிட்டாத கொழுப்புகளை கொண்டு மாற்றுவது நமது இதயத்தமனி நோயின் அபாயத்தை குறைகிறது என்பதற்கான மிதமான-தர ஆதாரத்தை அளிக்கின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information
Share/Save