முன்புற சிலுவை வடிவ தசை நாரின் (ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட், ஏசிஎல்) காயங்களுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சைக்கு எதிராக பாரம்பரிய சிகிச்சை தலையீடுகள்

பின்புலம்

முழங்காலின் முன்புற சிலுவை வடிவ தசை நார் (ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட், ஏசிஎல்) கிழிபடுதல் என்பது இளவயது, சுறுசுறுப்பான தனிநபர்களில் ஒரு பொதுவான காயமாகும். அது பெரும்பாலும், மூட்டுப்பகுதி அரைவட்ட தசைக் குருத்தெலும்பின் (மெனிஸ்கை) மேல் மேற்படியான முழங்கால் பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய ஒரு நிலையற்ற முழங்காலுக்கு வழி வகுக்கும். தடகள தனிநபர்களில், ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட் காயங்கள் அடிக்கடி அறுவை சிகிச்சை மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. சாதரணமாக, கிழிந்த தசை நாரை எடுத்து விட்டு மற்றும், பெரும்பாலும் நோயாளியின் முழங்காலின் இன்னொரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு தசை நாண் ஒட்டைக் கொண்டு மாற்றி பொருத்தும் ஏசிஎல் மறுசீரமைப்பை அறுவை சிகிச்சை உள்ளடக்கக் கூடும். இந்த காயத்திற்கு, பாரம்பரிய (அறுவை சிகிச்சை-அல்லாத) சிகிச்சை தலையீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது சாதரணமாக, வலிமை மற்றும் உடல் சம நிலையை மேம்படுத்த நோக்கம் கொண்ட உடற்பயிற்சிகளைக் கொண்ட அதிகரித்துக் கொண்டு செல்லும் புனர்வாழ்வு திட்ட வடிவை கொண்டிருக்கும். ஏசிஎல் காயங்களுக்கு சிகிச்சையளிக்க , அறுவை சிகிச்சை மற்றும் அதற்கு எதிராக பாரம்பரிய சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிட நாங்கள் நோக்கம் கொண்டோம்.

தேடல் முடிவுகள்

ஏசிஎல் காயங்களுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை மற்றும் பாரம்பரிய சிகிச்சை தலையீடுகளை ஒப்பிட்ட ஆய்வுகளுக்கு ஒரு முறைபடுத்தப்பட்ட இலக்கிய தேடலை (18 ஜனவரி, 2016 வரைக்கும்) நாங்கள் நடத்தினோம். முந்தைய நான்கு வாரங்களில் ஏசிஎல் காயத்தை கொண்ட இளவயது, சுறுசுறுப்பான 121 வயது வந்தவர்களின் ஒரு ஆய்வை இந்த திறனாய்வு அடையாளம் கண்டது. இந்த ஆய்வு, பாரம்பரிய சிகிச்சையோடு (கட்டமைக்கப்பட்ட புனர்வாழ்வு மட்டும்) அறுவை சிகிச்சையை ( ஏசிஎல் மறுசீரமைப்பை தொடர்ந்த ஒரு கட்டமைக்கப்பட்ட புனர்வாழ்வு) ஒப்பிட்டது.

முக்கிய முடிவுகள்

இரண்டு அல்லது ஐந்து வருடங்களில் நோயாளி அறிக்கையிட்ட முழங்கால் மதிப்பெண்களில் அறுவை சிகிச்சை மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்கு இடையே, எந்த வித்தியாசத்தையும் இந்த ஆய்வு காணவில்லை. ஒவ்வொரு குழுவிலும் எத்தனை எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் எந்த வகை கடுமையான அல்லது கடுமையல்லாத சிக்கல்களை கொண்டிருந்தனர் என்பதை இந்த ஆய்வு அறிக்கையிட தவறி விட்டது. எனினும், அறுவை சிகிச்சை குழுவில், மூன்று பேர்களுக்கு தசை நாண் ஒட்டு கிழிந்து போனது அறுவை சிகிச்சை-தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கியது, மற்றும் பாரம்பரிய சிகிச்சை குழுவில், அநேக பங்கேற்பாளர்கள் நிலையற்ற முழங்கால்களைக் கொண்டிருந்தனர். பாரம்பரிய சிகிச்சை குழுவில், இரண்டு வருடங்களுக்குள்ளாக, 59 பங்கேற்பாளர்களில் இருபத்தி-மூன்று பேர்கள் (39%) ஏசிஎல் சீரமைப்பு அல்லது கிழிந்த மெனிஸ்கஸ் பழுது நீக்கலை கொண்டிருந்தனர், மற்றும் ஐந்து வருடங்களுக்குள்ளாக, 30 பேர்கள் (51%) அறுவை சிகிச்சையை கொண்டிருந்தனர். இரண்டு குழுக்களிலும், ஐந்து வருடங்களில், முழங்கால் மெனிஸ்கஸ் காயங்களுக்கு ஒரே மாதிரி எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் அறுவை சிகிச்சையைக் கொண்டிருந்தனர் என்பதற்கு சில ஆதாரம் இருந்தது. கீல்வாதம் உருவாகி பெருகுவதின் அதிக அபாயத்திற்கு இருப்பர் என்பதை பொருள் படுத்தும் வண்ணம், அறுவை சிகிச்சை குழுவில் அதிக பங்கேற்பாளர்கள் முழங்கால் பாதிப்பை கொண்டிருந்தனர் என்பதற்கு மிக குறைந்த ஆதாரம் உள்ளது.

சான்றின் தரம்

ஒரே ஒரு ஆய்வின் தரவு மட்டுமே கிடைக்கப் பெற்றதினால் ஆதாரத்தின் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அவர்களின் சிகிச்சைக்கு மறைக்கப்படாத காரணத்தினால், ஆய்வு உயர் ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டிருந்தது. ஒட்டுமொத்தமாக, ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது, அதென்னவென்றால், ஆய்வு முடிவுகளை பற்றி நாங்கள் உறுதியற்று இருக்கிறோம், மற்றும் எங்களின் முடிவுகளை மாற்றக் கூடிய ஆதாரத்தை மேற்படியான ஆராய்ச்சி அளிக்க கூடும்.

முடிவுரைகள்

கடுமையான ஏசிஎல் காயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்ட இளவயது, சுறுசுறுப்பான வயது வந்தவர்களில், இரண்டு மற்றும் ஐந்து வருடங்களில், நோயாளி-அறிக்கையிட்ட முழங்கால் செயல்பாடு விளைவுகளில், அறுவை சிகிச்சை மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை. எனினும், கிழிந்த ஏசிஎலை கொண்டிருந்த அநேக பங்கேற்பாளர்கள், கட்டமைக்கப்பட்ட புனர்வாழ்வைத் தொடர்ந்து நிலையற்ற முழங்கால்களைக் கொண்டிருந்தனர் மற்றும் அதற்கு பின்னாக, அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுத்தனர்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information