கடுமையான ஆஸ்துமா கொண்ட குழந்தைகளில், மக்னீசியம் சல்பேட் உட்செலுத்தல்கள் மருத்துவமனை அனுமதித்தல்களை குறைக்கக் கூடுமா?

பின்புலம்

அநேக குழந்தைகள் உயிரை-அச்சுறுத்தும் ஆஸ்துமா தாக்குதல்களை அனுபவிக்கக் கூடும் மற்றும் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படக் கூடும். பிற சிகிச்சைகளுக்கு சிறப்பாக இணங்காத ஆஸ்துமா தாக்குதல்களைக் கொண்ட குழந்தைகளில், மக்னீசியம் சல்பேட் (IV MgSO4)என்ற ஒரு மருந்தை உட்செலுத்தலை சில தேசிய மற்றும் சர்வதேச சிகிச்சை வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன இந்த சிகிச்சை, வயது வந்தவர்களில் மருத்துவமனை அனுமதித்தல்களின் தேவையை குறைப்பதாக காட்டியுள்ளன, ஆனால் குழந்தைகளுக்கு அதே போன்று பாதுகாப்பாக மற்றும் திறன் மிக்கதாக இருக்குமா என்பது தெளிவாக இல்லை

ஆய்வு பண்புகள்

பிற சிகிச்சைகள் (வழக்கமான மூச்சினுள் இழுக்கப்படும் மூச்சுக்குழல் விரிப்பான்கள், ஸ்டீராய்டுகள், மற்றும் சில சமயங்களில் பிராணவாயு ) ஆஸ்துமா தாக்குதலுக்கு நிவாரணம் அளிக்காத நிலையில், குழந்தைகளில் ஒரு போலி உட்செலுத்தலுடன் MgSO4 உட்செலுத்தலை ஒப்பிட்ட ஐந்து ஆய்வுகளை நாங்கள் கண்டோம். இந்த ஐந்து ஆய்வுகள் மொத்தம் 182 குழந்தைகளை உள்ளடக்கின. நாங்கள் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான தேவை என்ற விளைவை மூன்று ஆய்வுகள் மட்டும் அறிக்கையிட்டிருந்தன. இந்த ஆய்வுகள் 1996 முதல் 2000 வரைக்குமிடையே வெளியிடப்பட்டிருந்தன: பெப்ரவரி 2016-ல் நாங்கள் தேடிய போது, இவற்றையே மிகவும் சமீபத்திய ஆய்வுகளாக எங்களால் காண முடிந்தது.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

போலி சிகிச்சையோடு ஒப்பிடுகையில், MgSO4 உட்செலுத்தல் கொண்ட வெகு சில குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான தேவை ஏற்பட்டது. உண்மையில் உள்ளபடி, MgSO4 கொண்டு சிகிச்சையளிக்கப்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளுக்கும், ஒரு மருத்துவமனை அனுமதி தடுக்கப்பட்டது. எனினும், பிரதான பகுப்பாய்வில் 115 குழந்தைகள் மட்டுமே இருந்த சிறிய ஆய்வுகள் உள்ளடக்கப்பட்டன; மற்றும் முடிவுகள் வேறுப்பட்டிருந்தன, ஆதலால், நன்மைகள் மற்றும் தீங்குகள் பற்றி எங்களால் முழுவதுமாக உறுதியாய் இருக்க முடியவில்லை. வெகு சில ஆய்வுகளே இருந்ததால், மருத்துவமனை அனுமதித்தல்களின் குறைவு வயது, ஆஸ்துமா மோசமாகுதலின் தீவிரம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாக இருந்ததா அல்லது பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போது, வித்தியாசத்தை ஏற்படுத்தியதா என்பது பற்றி எங்களால் சொல்ல முடியவில்லை. குழந்தைகள் MgSO4 பெற்ற போது, தீங்கு பற்றிய எந்த அறிக்கைகளும் இல்லை.ஆதலால், குழந்தைகளில் MgSO4-ன் பயன்பாட்டை இந்த திறனாய்வு ஆதரிக்கிறது, எனினும், அதன் பயன்பாட்டிற்கு மிக வலுவல்லாத ஆதாரமே உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information