பிரான்க்யக்டேசிஸ் கொண்ட வயது வந்தவர்கள், அவர்களின் ஆரோக்கிய வல்லுநரால் அறிவுறுத்தப்பட்ட சிகிச்சைகளை அந்தப்படியே எடுத்துக் கொள்ள எவ்வாறு ஊக்கப்படுத்தப்படலாம் ?

திறனாய்வு கேள்விபிரான்க்யக்டேசிஸ் கொண்ட வயது வந்தவர்கள், மருந்துகள், சுவாச பயிற்சிகள் அல்லது அவர்களின் ஆரோக்கிய வல்லுநரால் அறிவுறுத்தப்பட்ட பிற உடற்பயிற்சி போன்ற சிகிச்சைகளை முடிப்பதற்கு எவ்வாறு ஊக்கப்படுத்தப்படலாம் ?

பின்புலம்

பிரான்க்யக்டேசிஸ், காற்றுக் குழாய்களின் விரிவினால் ஏற்படுவதாகும். பிரான்க்யக்டேசிஸ் கொண்ட மக்கள், அவர்களின் நுரையீரல்களில் மிக அதிகமான சளியை கொண்டிருப்பர், மற்றும் நெஞ்சு தொற்றுகளினால் அடிக்கடி அவதிப்படுவர். பிரான்க்யக்டேசிஸ், மிக பொதுவாக பெண்களில், மற்றும் அவர்களில், நடுத்தர வயதிலுள்ளவர்களில் ஏற்படும். மூச்சு உள்ளிழுப்பான்கள், தெளிப்பான்கள், மற்றும் காற்றுக் குழாய் இளக்க நீக்கல் நெஞ்சக பிசியோதெரபி ஆகியவை பிரான்க்யக்டேசிஸ்-ற்கு அறிவுறுத்தப்படும் சிகிச்சைகளில் உள்ளடங்கும். இவை அனைத்தையும் சரியாக செய்வதற்கு ஒவ்வொரு நாளும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள கூடும். பிரான்க்யக்டேசிஸ் கொண்ட பல மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைகளில் இந்த சிகிச்சைகளை பொருத்திக் கொள்வதை சிரமமாக கருதுவர்.

ஒரு ஆரோக்கிய வல்லுநரால் அறிவுறுத்தப்பட்ட சிகிச்சைகளை அந்தப்படியே எடுத்துக்கொள்வது, கடைப்பிடித்தல் என்று அழைக்கப்படும். நுண்ணுயிர் கொல்லி தெளிப்பான்கள் போன்ற சிகிச்சைகளுக்கு குறைவான கடைப்பிடித்தல் உள்ள பிரான்க்யக்டேசிஸ் கொண்ட மக்கள், உயர்ந்த கடைப்பிடித்தல் கொண்டவர்களை விட அதிகமான நெஞ்சு தொற்றுகளைக் கொண்டிருப்பர். பிரான்க்யக்டேசிஸ் கொண்ட வயது வந்தவர்கள், அவர்களின் ஆரோக்கிய வல்லுநரால் அறிவுறுத்தப்பட்ட சிகிச்சைகளை அந்தப்படியே எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிற வழிகளை நாங்கள் கண்டறிய விரும்பினோம்.

தேடல் தேதி

ஆதாரம், அக்டோபர் 2015 வரை தற்போதையானது.

முக்கிய முடிவுகள்

நாங்கள் 37 அறிக்கைகளை அடையாளம் கண்டோம், ஆனால், சிகிச்சையின் கடைப்பிடித்தலை மேம்படுத்தும் வழிகளை சோதித்த எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை. இந்த கேள்விக்கு பதிலளிக்க, தகுந்த எண்ணிக்கையிலான பிரான்க்யக்டேசிஸ் கொண்ட மக்களை உள்ளடக்கிய சரியாக-வடிவமைக்கப்பட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information