ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான சுவாசப் பயிற்சிகள்

பின்புலம்

ஆஸ்துமா என்பது காற்று கடத்தலில் அடைப்பிற்கு (தடை) வழி வகுத்து மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் நுரையீரல்களின் ஒரு நாள்பட்ட (நீடிக்கும்) அழற்சி வியாதியாகும். மருத்துவமனை சேர்க்கை மற்றும் மருந்துகளால் ஏற்படும் அதிகரிக்கும் ஆரோக்கிய பராமரிப்பு செலவுகள் காரணமாக உலகளவில் அதிக பரவலாக இருக்கும் ஆஸ்துமா ஒரு பொது ஆரோக்கிய பிரச்னையாக உருவாகி உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆஸ்துமா குழந்தைப்பருவத்தின் ஒரு மிக பொதுவான நாள்பட்ட நோயாகும். ஆஸ்துமா கொண்ட மக்களுக்கு ஒரு மருந்தற்ற சிகிச்சையாக சுவாசப் பயிற்சிகள் வழக்கமான சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன. சுவாசப் பயிற்சிகள், ஆஸ்துமா அறிகுறிகளான மிகை காற்றோட்டத்தை (அதிகமூச்சு) கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன மற்றும் பாப்வொர்த் செயல்முறை, புடிகோ சுவாச நுட்பம், யோகா அல்லது சுவாச அமைமுறையை மாற்றுவதின் மேல் நோக்கம் கொண்ட எந்த பிற அதே மாதிரியான செயல்முறையையும் உள்ளடக்கும்.

திறனாய்வு கேள்வி

ஆஸ்துமா கொண்ட குழந்தைகளில் சுவாசப் பயிற்சிகளின் விளைவுகளுக்கான ஆதாரத்தை காண நாங்கள் விரும்பினோம்.

முக்கிய முடிவுகள்

லேசான முதல் தீவிரமான ஆஸ்துமா கொண்ட 112 குழந்தைகளை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகளை நாங்கள் கண்டோம். உள்ளடக்கப்பட்ட ஆய்வுகள், கட்டுப்பாட்டிற்கு எதிராக சுவாசப் பயிற்சிகளை ஒரு அதிகப்படியான சிக்கல் மிகுந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக (உள்மூச்சிழுக்கும் தசை பயிற்றுவிப்பு, தளர்வு உடற்பயிற்சிகள், நீடிக்கும் ஆற்றல் திறன் உடற்பயிற்சிகள், ஒத்திசைந்த இயக்க பயிற்சிகள், அதிர்வுகள், தட்டல்கள், மிகை முயற்சியான மூச்சு வெளியீட்டு நுட்பம்) ஒப்பிட்டன. ஆய்வுகள், 28 முதல் 60 குழந்தைகள் வரை அளவுகளில் வேறுப்பட்டிருந்தன. ஆய்வு மக்கள் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளாய் இருந்தனர். கட்டுப்பாட்டு குழுக்கள் வெவ்வேறு விதமான சிகிச்சைகளை பெற்றனர்; ஒன்று போலி (பாசாங்கு) சிகிச்சையை பெற்றது; ஒன்று ஒரு விளக்கக் கல்வி திட்டம் மற்றும் மருத்துவரை சந்திக்கும் அமர்வுகளை பெற்றது, மற்றும் இன்னொன்றில் எதுவும் விவரிக்கப்படவில்லை. சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்களின் இடையேயான ஒப்பீடுகள் என்று அறிக்கை செய்யப்பட்டதில் எந்த முதன்மை விளைவுகளையும் (வாழ்க்கைத் தரம், ஆஸ்துமா அறிகுறிகள், மற்றும் சிகிச்சையின் பக்க விளைவுகள் போன்றவற்றின் அளவீடுகள்) நாங்கள் காணவில்லை.

சான்றின் தரம்

உள்ளடக்கப்பட்டிருந்த ஆய்வுகள் சிறியளவிலான ஒட்டுமொத்த எண்ணிக்கை கொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் அமர்வுகளைக் கொண்டிருந்தன. உள்ளடக்கப்பட்ட எந்த ஒரு ஆய்வும் சுவாசப் பயிற்சிகளை மட்டும் ஒரு கட்டுப்பாட்டிற்கு எதிராக ஒப்பிடவில்லை. அதற்கு பதிலாக, சிகிச்சைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக சுவாசப் பயிற்சிகள் இருந்தன, மற்றும் அவை ஒரு கட்டுப்பாட்டிற்கு எதிராக ஒப்பிடப்பட்டன. ஆய்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட செயல்முறைகள், நாம் விரும்புகிற வண்ணம் சிறப்பாக அறிக்கையிடப்படவில்லை, மற்றும் அதனால் சோதனைகளின் தரத்தை பற்றியும் தெளிவாக இல்லை. ஒட்டுமொத்தமாக, உள்ளடக்கப்பட்ட ஆய்வுகள் ஒரு தெளிவற்ற ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டிருந்தன மற்றும் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள ஆதாரத்தின் தரம் குறைவாக உள்ளது என்று நாங்கள் முடிவு செய்தோம்.

முடிவுரை

மருத்துவ நடைமுறையில் ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான சுவாசப் பயிற்சிகளின் பயன்பாட்டை பற்றி நம்பத்தகுந்த முடிவுகளை எங்களால் எடுக்க முடியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information