கழுத்து வலிக்கான புலனுணர்வு-நடத்தை சிகிச்சை

பின்னணி

கழுத்து வலி (நெக் பெயின், என்பி) என்பது கழுத்தில் வலி, தசை இறுக்கம், அல்லது விறைப்புத்தன்மை என்று வரையறுக்கப்படுகிறது மற்றும் இது, முதுகெலும்பு அல்லது மென்மையான திசுக்களில் உட்பட பல அமைப்புகளிலிருந்து இருந்து தொடங்குவதாக இருக்கலாம். வயது, பாலினம், வலி ​வரலாறு, சரியில்லாத உடல் அமைவு, தொடர்ச்சியான நசிவு, மற்றும் சமூக மற்றும் உளவியல் காரணிகள் அபாய கூறுகளில் அடங்கும்.

கழுத்து வலி, அனைத்து வயது மற்றும் இரு பாலின மக்களால் அனுபவிக்கப்படுவதாகும் மற்றும் மருத்துவ செலவுகள், வேலை வருகையின்மை, உடல் ஊனம் போன்றவற்றுக்கு முக்கியமான காரணமாகும். மறு காப்புறுதி, விளக்கக் கல்வி, சரியான நேரத்தில் சாதாரண நடவடிக்கைகளுக்கு திரும்புதலுக்கான ஊக்கம், வலி ​​நிவாரணிகள் மற்றும் உடற்பயிற்சிகளின் ஏற்ற பயன்பாடு ஆகியவை கழுத்து வலிக்கான தற்போதைய மேலாண்மையின் வெவ்வேறு சிகிச்சைகளின் வரம்பாகும்.

இந்த நோயாளிகளில், புலனுணர்வு -நடத்தை சிகிச்சையின் (சிபிடி ) பலாபலன் பற்றி நிச்சயமற்றதாக உள்ளது. சிபிடி என்பது ஆரோக்கிய வல்லுனர்களால் நடத்தப்படும் பரந்த சிகிச்சை தலையீடுகளின் தொகுப்பை கொண்ட ஒரு உளவியல் நுட்பமாகும். இது, வலி அத்துடன் உடல் மற்றும் உளவியல் இயலாமையின் தாக்கத்தை குறைப்பதற்கு , மற்றும் உடல் மற்றும் உளவியல்-சமூக ரீதியான மீட்சியின் ஆபத்தான தடைகளை கடப்பதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளின் புலனுணர்வு மற்றும் நடத்தை மாற்று முறைகளை உள்ளடக்கும்.

திறனாய்வு கேள்வி

எனவே, மித-குறுகிய கால மற்றும் நாள்பட்ட கழுத்து வலி கொண்ட நோயாளிகள் மத்தியில் வலி, இயலாமை, உளவியல் கூறுகள், மற்றும் வாழ்க்கை தரத்தின் மீதான சிபிடியின் விளைவு பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். குறிப்பாக, நாங்கள் இவற்றை ஒப்பீடு செய்தோம்; சிபிடி எதிராக சிகிச்சையின்மை, சிபிடி எதிராக பிற விதமான சிகிச்சை தலையீடுகள், மற்றும் இன்னொரு சிகிச்சை தலையீட்டோடு சிபிடி (எ.கா. பிசியோதெரபி) எதிராக மற்ற சிகிச்சை தலையீடு மட்டும்.

ஆய்வு பண்புகள்

நவம்பர் 2014 வரை வெளியான ஆராய்ச்சியை நாங்கள் சோதித்தோம். 10 சீரற்ற சோதனைகளை (836 பங்கேற்பாளர்கள்) நாங்கள் சேர்த்தோம். இரண்டு ஆய்வுகள் மித-குறுகிய கால கழுத்து வலி கொண்ட ஆய்வு மக்களை (337 பங்கேற்பாளர்கள்) சேர்த்திருந்தது. அதே வேளையில், மற்ற எட்டு ஆய்வுகள் நாள் பட்ட கழுத்து வலி கொண்ட ஆய்வு மக்களை (499 பங்கேற்பாளர்கள்) சேர்த்திருந்தது. சிபிடி இவற்றோடு ஒப்பிடப்பட்டது; சிகிச்சையின்மை (225 பங்கேற்பாளர்கள்) அல்லது மற்ற வகையான சிகிச்சைகள் (506 பங்கேற்பாளர்கள்) அல்லது மற்றொரு சிகிச்சை தலையீட்டோடு இணைந்து அளிக்கப்பட்டது (எ.கா. பிசியோதெரபி) மற்றும் பிற சிகிச்சை தலையீட்டுடன் மட்டும் (200 பங்கேற்பாளர்கள்). முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆரோக்கிய பராமரிப்பு மையங்களில் சிகிச்சை தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய முடிவுகள்

நாள்பட்ட கழுத்து வலியைக் குறித்து, வலி, இயலாமை, மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியதில் சிகிச்சையின்மையை விட சிபிடியானது, புள்ளியல்படி குறிப்பிட தகுந்ததாய் சிறப்பாக இருந்தது, ஆனால் இந்த விளைவுகளை மருத்துவ அர்த்தமுள்ளதாக கருத முடியாது. சிபிடி மற்றும் பிற தலையீடுகள் மத்தியில் (எ.கா. மருந்து, விளக்கக் கல்வி, பிசியோதெரபி, கையாள்கை சிகிச்சை, மற்றும் உடற்பயிற்சிகள்) வலி மற்றும் இயலாமை அடிப்படையில் எந்த வித்தியாசங்களும் காணப்படவில்லை; இயக்கத்தை பற்றிய பயத்தை குறைப்பதற்கு பிற சிகிச்சை தலையீடுகளை விட சிபிடி சிறப்பானதாக இருந்தது என்பதற்கு மிதமான ஆதாரம் இருந்தது. மேலும், வலி மற்றும் இயலாமையை குறைப்பதற்கு, ஒரு தனி சிகிச்சை தலையீட்டைக் காட்டிலும் மற்றொரு சிகிச்சை தலையீட்டோடு அளிக்கப்பட்ட சிபிடி சிறப்பானதாக இல்லை என்பதற்கு மிக குறைந்த தர ஆதாரம் உள்ளது.

மித குறுகிய-கால கழுத்து வலிக்கு, பிற சிகிச்சை தலையீடுகளின் வகைகளைக் காட்டிலும் (எ.கா.கையாள்கை சிகிச்சை அல்லது விளக்கக் கல்வி) வலியை குறைப்பதில் சிபிடி புள்ளிவிவரப்படி குறிப்பிட தகுந்ததாக இருந்தது என்பதற்கு குறைந்த தர ஆதாரம் இருந்தது, ஆனால் இதன் விளைவு மருத்துவ தொடர்புடையதாக இருக்கவில்லை. இயலாமை மற்றும் இயக்கத்தை பற்றிய பயத்தின் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.

சேர்க்கபட்டிருந்த எந்த ஆய்வுகளும் புலனுணர்வு-நடத்தை சிகிச்சை முறை தொடர்பான ஏதேனும் தீங்கு விளைவுகளை பற்றி அறிக்கையிடவில்லை.

சான்றின் தரம்

இந்த திறனாய்வில் உள்ள சான்றின் தரம் "மிகவும் குறைவு" மற்றும் "மிதமான" வரை வேறுபட்டது. எனவே, திறனாய்வின் முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் கொள்ள வேண்டும். மித குறுகிய-கால மற்றும் நாள்பட்ட கழுத்து வலிக்கு, புலனுணர்வு-நடத்தை சிகிச்சையின் குறுகிய மற்றும் நீண்ட கால பலன்கள், மற்றும் மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் அதன் திறன், மற்றும் எந்த நோயாளிகள் இந்த சிகிச்சை தலையீட்டினால் பெரும் பயனை பெறுவர் என்பதை புரிந்து கொள்ளல் ஆகியவற்றை குறிப்பிட்டு ஈடுபடுத்தும் அதிகப்படியான உயர் தர சீரற்ற சோதனைகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information