உடலியல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு நெடுந்தொலைவு மற்றும் இணைய 2.0 சிகிச்சை தலையீடுகள்

பற்றாக்குறையான அளவுகளில் உடலியல் நடவடிக்கையில் பங்குபெறுவது, எண்ணிக்கையிலான நாள்பட்ட வியாதிகள், மற்றும் உடலியல் மற்றும் மன நல பிரச்னைகளின் அதிகரித்த அபாயத்திற்கு வழி நடத்தும். அனைத்து வயது வந்தவர்களுக்கும், ஒழுங்கான உடலியல் நடவடிக்கை ஒரு நோக்கமாக இருக்க வேண்டும், மற்றும் இது சமூக, உணர்வுபூர்வமான, மற்றும் உடலியல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடும். பெரும்பான்மையான வயது வந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் உடலியல் இயக்கத்துடன் இல்லை. வெளிப்படையான ஆரோக்கியமான 5862 வயது வந்தவர்களை சேர்த்த மொத்தம் 11 ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் உள்ளடக்கினோம். அதிக இயக்கத்துடன் இருக்க மாறுவதற்கு, பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கையின் வார அளவுகளை அடைவதற்கு, அல்லது உடற்திறன் கொண்டவர்களாக மாறுவதற்கான வயது வந்தவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது வெற்றியளித்தது என்று இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பயிற்சியளிக்கப்பட்ட தொழில்முறை வல்லுநரின் உதவியாலும் மற்றும் தொலைப்பேசி, மின்னஞ்சல் அல்லது எழுதப்பட்ட தகவல் மூலம் பெறும் தனிப்பட்ட ஆதரவாலும் மாற்றங்களை அடையலாம். புதிய உடலியல் நடவடிக்கை, குறைந்தப்பட்சம் ஒரு வருடத்திற்காவது பராமரிக்கக் கூடும், மற்றும் அது, கீழே விழுதலின் அபாயத்தை அல்லது உடற்பயிற்சி தொடர்பான காயங்களை அதிகரிக்காது. குறிப்பிட்ட மக்கள் குழுக்களை ஒரு நீண்ட காலத்திற்கு அதிக உடலியல் இயக்கத்துடன் இருக்க எந்த உடற்பயிற்சி மேம்பாட்டு முறைகள் ஊக்குவிக்கும் என்பதை நிர்ணயிக்க அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information