ஆஸ்துமா கொண்ட மக்களுக்கு ஒரு கூடுதல் சிகிச்சைத் தேர்வாக யோகா

பின்புலம்

உலகளவில், ஆஸ்துமா என்பது ஏறத்தாழ முப்பது கோடி மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான நாள்பட்ட வியாதியாகும். உலகம் முழுதும் பரந்திருக்கும் புகழைக் கொண்ட யோகா சில ஆஸ்துமா-தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளது. எனினும், தற்போது இருக்கும் ஆய்வுகளின் நிலைப்பாடில்லாத கண்டுப்பிடிப்புகள் காரணமாக, ஆஸ்துமாவிற்கான யோகாவின் விளைவுகள் பற்றி உறுதிபடுத்த வேண்டி இருக்கிறது.

ஆய்வு பண்புகள்

வழக்கமான சிகிச்சை அல்லது ஒரு 'போலி' யோகாவோடு, யோகாவின் விளைவுகளை ஒப்பிட்ட 1048 பங்கேற்பாளர்களைக் கொண்ட 15 ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

முடிவுகள்

அநேகமாக, வாழ்க்கைத் தரத்தையும் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளையும் யோகா ஓரளவிற்கு மேம்படுத்தக் கூடும் என்று நாங்கள் கண்டோம். எனினும், பெரும்பாலான ஆய்வுகள் பல்வேறு வழிகளில் குறைவுகளைக் கொண்டுள்ளதால், கண்டுப்பிடிப்புகளின் மேலான எங்களின் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. நுரையீரல் செயல்பாட்டின் மேல் யோகாவின் விளைவுகள் நிலையற்றதாய் இருந்தது; மற்றும் மருந்துகள் உபயோகிப்பதை யோகா குறைக்கக் கூடும் என்பதற்கு சிறிய அளவிலான ஆதாரத்தை நாங்கள் கண்டோம். தேவையற்ற விளைவுகள் மீதான தகவல் மிகவும் வரம்பிற்குட்பட்டிருந்தது; இதனை மதிப்பிட அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆஸ்துமாவிற்கான யோகாவின் விளைவுகள் பற்றி ஒரு திடமான முடிவினை எங்களால் எடுக்க முடிவதற்கு அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய உயர்-தர ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information