மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களை பின்தொடர்தலுக்கான பல ஒழுங்குச்சார்ந்த புனர்வாழ்வு

உலகெங்கும் பெண்களில், மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய் ஆகும். மார்பகப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்கள், பெரும்பாலும் அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கசிகிச்சை (radiation ) அல்லது வேதிச்சிகிச்சை(chemotherapy) அல்லது இரண்டும் சேர்ந்த சிகிச்சை போன்றவை உள்ளடங்கிய வைத்தியங்களை மேற்கொள்கின்றனர். மார்பக புற்றுநோய் மேலாண்மையில் இவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் வந்திருக்க, பல நோயாளிகள் குறுகிய அல்லது நீண்ட கால பக்க விளைவுகள் மற்றும் வாழ்க்கை தரத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நோய் மற்றும் சிகிச்சை தொடர்புடைய உளவியல் துயரத்தை இன்னும் சமாளிக்க வேண்டியிருக்கலாம். பல்துறை புனர்வாழ்வு திட்டங்கள், பெண்களுக்கு விளைவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது, ஆனால் அதன் செயல்திறனிற்கான ஆதார அடித்தளம் இன்னும் நிலை நாட்டப்பட்டவில்லை. பல்துறை புனர்​வாழ்வுத் திட்டங்கள் மாறுபடும் மற்றும் வழக்கமாக​ மருத்துவம், உடற்பயிற்சி, கல்வி, மற்றும் உளவியல் ஆலோசனை மற்றும் ஆதரவு தலையீடுகள் ​ஆகியவற்றில் ​இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ​ஒன்றுக்கும் ​மேற்பட்ட தலையீடு​களை ​உள்ளடக்கி இருக்கும். இந்த திறனாய்வு, மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை ​பெற்ற ​பெண்க​ளை ​ பின்தொடர்ந்த போது, ஏற்பாடு ​செயப்பட்ட ​பல்துறை ​புனர்வாழ்வு ​திட்டங்களின் ​விளைவுக​ளை ​ மதிப்பீடு​ செய்த ​ சோதனைக​ளை ​மதிப்பீடு​ செய்தது.

இந்த திறனாய்வு, மார்பக புற்றுநோய் கொண்ட 262 நோயாளிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை அடையாளம் கண்டது. இந்த ஆய்வுகளில் இருந்த தரவு, பல்துறை புனர்வாழ்வு திட்டங்கள், குறைபாடு நிலைகள் (தோள்பட்டை இயக்க வரம்பு), உளவியல் ரீதியான சீரமைப்பு மற்றும் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகான வாழ்க்கை தரம், ஆகியவற்றில் குறுகிய கால நன்மைகளை விளைவிக்கிறது என்பதற்கு குறைந்த தர ஆதாரத்தை வழங்குகிறது. எந்த ஆய்வுகளும் இத்தகைய பராமரிப்பின் நீண்ட கால செயல்பாட்டு வெளிப்பாடுகள், பராமரிப்பாளர்கள் மீதான தாக்கம் அல்லது இந்த திட்டங்களின் செலவு திறன் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக , இந்த திறனாய்வு முடிவுகள், பல்துறை புனர்வாழ்வு திட்டங்களில் எந்தத் தீமையும் இல்லை, மேலும் குறுகிய காலத்தில் செயல்பாட்டு திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கூடும் என்று கூறுகிறது. இந்த திறனாய்வு, இத்துறையில் வலுவான சோதனைகள் இல்லாமையையும் , மேலும் உயர்தர சோதனை சார்ந்த ஆராய்ச்சியின் தேவையையும் முனைப்பாக காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information