சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில் உடலியல் நடவடிக்கை பங்கேற்பை உயர்த்துவதற்கான உக்திகள் 

தசைகள் மூலம் உருவாக்கப்பட்டு மற்றும் ஆற்றலை எரிக்கும் எந்த ஒரு உடல் அசைவும் உடலியல் நடவடிக்கை என்பதை குறிக்கும். உடலியல் நடவடிக்கை , உடற்பயிற்சியை உள்ளடக்கும், ஆனால் வேலை, இடைக்கால வேலை அல்லது போக்குவரத்தின் ஒரு பகுதியான நடவடிக்கையையும் உள்ளடக்கும். ஒழுங்கான உடலியல் நடவடிக்கையில் பங்கேற்பது ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த நலத்திற்கும் முக்கியமானதாகும். சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில் உடலியல் நடவடிக்கை மற்றும் உடற்பயிற்சி வழக்கமாக பரிந்துரைக்கப்படுகிறது,ஆனால் அறிவுறுத்தப்பட்ட திட்டங்களில் பங்கேற்பது அடிக்கடி குறைவாக உள்ளது. சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில், அவர்களின் பகல் வேளையில் அதிகமான உடலியல் நடவடிக்கையை செய்ய ஊக்கப்படுத்துவதற்கான சிறந்த வழி தெளிவற்றதாக உள்ளது. சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில், அன்றாட உடலியல் நடவடிக்கையில் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவதற்கான உக்திகளை மதிப்பீடு செய்வதை இந்த திறனாய்வு நோக்கமாக கொண்டுள்ளது. உடலியல் நடவடிக்கையில் பங்கேற்பின் மேல் உடற்பயிற்சி பயிற்றுவிப்பின் விளைவை ஆராய்ந்த, மொத்தம் 199 பங்கேற்பாளர்களை கொண்ட நான்கு ஆய்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவை , பெரும்பாலும் குழந்தைகளில் நடத்தப்பட்டன. ஆய்வு முறைகள் மற்றும் முடிவுகள் தெளிவாக அறிக்கையிடப்படவில்லை, ஆதலால், பங்கேற்பாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட வழி அல்லது அறிக்கையிடப்பட்டிருந்த விளைவுகளின் தன்மை போன்றவற்றால் முடிவுகள் தாக்கத்துக்குள் உள்ளானதா என்பதை சொல்வது கடினமாக உள்ளது. பயிற்றுவிப்பு திட்டங்கள் 18 நாட்கள் முதல் மூன்று வருடங்கள் வரை பரவி இருந்தன . இரண்டு ஆய்வுகளில், உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டங்கள் கண்காணிக்கப்பட்டன; மற்றும் இரண்டு ஆய்வுகளில், அவை கண்காணிக்கப்படாமல் மற்றும் வீடு-சார்ந்ததாக இருந்தன. ஆய்வு வடிவமைப்பு, மற்றும் அளவிடப்பட்ட விளைவுகளில் இருந்த வித்தியாசங்களால், வெவ்வேறு ஆய்வுகளில் இருந்து தரவை எங்களால் இணைக்க முடியவில்லை. ஆறு மாதங்களுக்கும் குறைவாக உடற்பயிற்சி பயிற்றுவிப்பு நீடித்த போது, உடலியல் நடவடிக்கையில் பங்கேற்பு மேம்பட்டது என்று எந்த ஒரு ஆய்வுகளும் அறிக்கையிடவில்லை. நடவடிக்கை ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி அறிவுரை பெற்ற பிறகு, குறைந்தது ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வீடு-உடற்பயிற்சி திட்டம், சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில் உடலியல் நடவடிக்கை பங்கேற்பை மேம்படுத்தியது என்பதற்கு மிக வரம்பிற்குட்பட்ட ஆதாரமே உள்ளது. எந்த ஒரு பயிற்றுவிப்பு திட்டமும் வாழ்க்கைத் தரத்தின் மேல் குறிப்பிடத் தகுந்த விளைவுகளைக் காட்டவில்லை. சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்ட மக்களில், ஆரோக்கிய பயிற்சியளிப்பு, அல்லது இணையம்-சார்ந்த அறிவுரை போன்ற உக்திகள் உடலியல் நடவடிக்கையில் ஒழுங்கான பங்கேற்பை மேம்படுத்த உதவக் கூடுமா என்பது தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information