ஆஸ்துமா கொண்ட மக்களில், எடை இழப்பு திட்டங்கள் ஆஸ்துமா விளைவுகளின் மேல் நன்மையான பயன்களைக் கொண்டுள்ளதா?

ஆஸ்துமா அனைத்து இனங்கள், வயதினர், மற்றும் பாலினரைப் பாதிக்கும் ஒரு நோய் ஆகும். ஆஸ்துமா நோய் கொண்ட மக்கள், அன்றாட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ​ மீண்டும் மீண்டும் ஏற்படும் இருமல் அத்தியாயங்கள், மார்பு இறுக்கம் அல்லது மூச்சு திணறல் போன்றவற்றை அனுபவிப்பர். அதிக உடல் எடை அல்லது உடல்பருமன் கொண்ட மக்களில் ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் அதே சமயம் அவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் இருக்கும் ​ என்றும் கடந்த சில பத்தாண்டு கால ஆராய்ச்சி காட்டுகிறது. ஆஸ்துமா உடைய அதிக உடல் எடையுள்ள அல்லது உடல் பருமனான நோயாளிகளில், எடை இழப்பு தலையீடுகள் ஆஸ்துமா கட்டுப்படுவதை முன்னேற்றுமா, அதே போல் உடல் எடை இழப்பை எட்டுமா என்பதை அறிய இந்த திறனாய்வு முயன்றது.

நான்கு நாடுகளிலிருந்து (பிரேசில், பின்லாந்து, மெக்ஸிக்கோ மற்றும் ஆஸ்திரேலியா) மொத்தம் 197 பங்கேற்பாளர்களைக் கொண்ட நான்கு ஆய்வுகளை இந்த திறனாய்வில் சேர்த்துள்ளோம். தனியாகவோ அல்லது இணைக்கப்பட்டதாகவோ, குறைந்த சக்தி அளிக்கும் உணவு முறைகள், உடற்பருமன்-எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உடல் செயல்பாடு போன்ற தலையீடுகள் உள்ளடக்கப்பட்டது. ஆய்வுகள் அதிகப்படியான ஒருதலை சார்பு ஆபத்தைக் கொண்டிருந்தன, மற்றும் கட்டுப்பாடு குழுக்களை ஒப்பிடும் போது எடை இழப்பு சிகிச்சை தலையீடுகள் எடை இழப்பை ஏற்படுத்தின என்று கண்டுபிடிப்புக்கள் காட்டின. அறிகுறிகளில் முன்னேற்றம், குறுகிய-கால நிவாரண மருந்துகளின் தேவை குறைப்பு மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் சிறிது முன்னேற்றம் போன்றவற்றோடு கூட எடை இழப்பு சம்பந்தபட்டிருந்தது. வாழ்க்கை தரம், ஆரோக்கிய பராமரிப்பு பயன்பாடு மற்றும் பாதகமான விளைவுகள் மீது தலையீட்டின் விளைவைப் பற்றி கருத்து சொல்ல போதுமான தரவு இருக்கவில்லை.

குறிப்பாக, இவ்வாய்வுகளில் பயன்படுத்தியது போல் முன் தொகுக்கப்பட்ட, குறைந்த ஆற்றல் உணவுகள் மற்றும், அதே போல் கட்டமைக்கப்பட்ட உடல் செயல்பாடு சார்ந்த தலையீடுகள் ஆகியவற்றை குழந்தைகளிலும், மற்றும் ஒருவேளை நடைமுறைபடுத்த சாத்தியக் குறைவுள்ள அல்லது செயல்படுத்த இயலாத பற்றாக்குறை வளங்களையுடைய ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் தகவல் அறிக்கைகள் கொண்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information