கர்ப்பிணி பெண்களில், கர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி

ஒவ்வொரு வருடமும், உலகெங்கிலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெண்கள், கர்ப்பக் காலத்தின் போது தொடங்கும் அல்லது அறியப்படும் குளுகோஸ் சகிப்பின்மை அல்லது உயர் இரத்த சர்க்கரை அடர்த்தி (ஹைபர்க்ளைசெமியா) என்று பொருள் விளக்கம் கொண்ட ஜெஸ்ட்டேசனல் டியாபடிஸ் மெலிடஸ் (ஜிடிஎம்)-யை கொண்டிருக்கின்றனர். சாதாரண கர்ப்பக் காலத்தின் போது, குழந்தைக்கு போதுமான ஊட்டச் சத்தை வழங்குவதை உறுதிப்படுத்த, இரத்த ஓட்டத்திலிருந்து குளுகோஸை தாயின் திசுக்களுக்கு கடத்துவதில் இன்சுலின் குறைந்த திறனை அடையும். கர்ப்பக் காலம் நீளும் போது, இந்த இன்சுலின் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் மற்றும் இந்த எதிர்ப்பை சந்திக்க தாய் போதுமான இன்சுலினை சுரக்காத பட்சத்தில், ஜிடிஎம் ஏற்படும். ஜிடிஎம் கொண்ட பெண்கள், எதிர்கால இரண்டாம் வகை நீரிழிவு நோய் அபாயத்தை கொண்டிருப்பர், மற்றும் அவர்களின் குழந்தைகள், அவர்களின் கருவளர் காலத்திற்கு-பெரியவையாகவும், குறைந்தது 4000 கிராமுகள் பிறப்பு எடை கொண்டவையாகவும், மற்றும் பிறப்பு காயங்கள் ஆகிய பாதகமான விளைவுகளின் அதிகரித்த அபாயத்தை கொண்டிருக்கும். அதிக உடல் எடையுடன் இருத்தல் அல்லது உடற்பருமன்; உடல் இயக்கமின்மை அல்லது உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை; குறைந்த நார் சத்து மற்றும் அதிக க்ளைசெமிக் சுமை கொண்ட உணவு முறை மற்றும் பாலி சிஸ்டிக் ஓவரியன் கூட்டு அறிகுறிகள் ஆகியவை ஜிடிஎம்-யின் மாற்றியமைக்க கூடிய அபாயக் காரணிகளில் அடங்கும். கர்ப்பிணி பெண்களில், குளுகோஸ் சகிப்பின்மையை அல்லது ஜிடிஎம்-யை தடுப்பதில், உடற்பயிற்சியின் விளைவுகளை ஆராய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது, மற்றும் இது, ஐந்து சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளிலிருந்து வரையறுக்கப்பட்ட ஆதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இரண்டு சோதனைகள் உடற்பருமனான பெண்களை உள்ளடக்கி இருந்தன. இந்த சோதனைகள், 922 பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளிலிருந்து தரவை வழங்கின மற்றும் அவை மிதமான ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டிருந்தன. வாடிக்கையான ஆலோசனையுடன் இணைந்த தனிப்பட்ட உடற்பயிற்சி, வாரந்திர, கண்காணிக்கப்பட்ட உடற்பயிற்சி அமர்வு அல்லது கண்காணிக்கப்பட்ட அல்லது கண்காணிக்கபடாத வீடு-சார்ந்த இடம் பெயராத சைக்கிள் ஓட்டுதல், ஆகியவற்றை உள்ளடக்கிய உடற்பயிற்சி திட்டங்கள் ஜிடிஎம் -ஐ தடுப்பதில் (18 முதல் 36 வார கர்ப்பக் காலத்தில், திரையிடல் சோதனை செய்யப்பட்ட 826 பெண்களை கொண்ட மூன்று சோதனைகள்), அல்லது இன்சுலின் உணர் திறனை மேம்படுத்துவதில், சாதாரண அன்றாட நடவடிக்கைகளை வழக்கமான பேறுக் காலத்திற்கு முந்தைய வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில் எந்த தெளிவான விளைவும் இல்லை. இந்த வரையறுக்கப்பட்ட தரவின் அடிப்படையில், மருத்துவ நடைமுறையை வழி நடத்துவதற்கு முடிவான ஆதாரம் கிடைக்கவில்லை. பெரியளவில், சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட சீரற்ற சோதனைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய அநேக சோதனைகள் வளர்ச்சியில் உள்ளன. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மற்ற ஏழு சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம்; மற்றும் அடுத்த புதுப்பித்தலில், இவற்றை இணைப்பதற்கு நாங்கள் கருத்தில் கொள்ளுவோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information