பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகளில் உமிழ்நீர் ஒழுகுதற்கான சிகிச்சை தலையீடுகள்.

பெருமூளை வாதம் கொண்ட பல குழந்தைகள் வாயிலிருந்து வழியும் உமிழ்நீரை கட்டுப்படுத்த சிரமப்படுவார்கள். உமிழ்நீர் ஒழுகுவதின் தீவிரத்தன்மை வேறுபடுகிறது, மேலும் இது குழந்தைகளுக்கும் , குடும்பத்தினருக்கும் மற்றும் பராமரிப்பாளர்களுக்கும் வேதனை அளிப்பதாய் இருக்கிறது . அளவுக்கதிகமாக வழியும் உமிழ்நீர், ஓயாத ஈரத்தன்மை , அழுக்கடைந்த ஆடை, விரும்பத்தகாத நாற்றம், வாய் மற்றும் தாடையைச் சுற்றிய பகுதிகளில் வெடிப்பு அல்லது புண் , தோல் மற்றும் வாய் தொற்று நோய்கள், உடல் நீர் வறட்சி, மெல்லுவதில் சிரமம் , பேச்சுக் குழப்பம், புத்தகங்கள் , தகவல் தொடர்பு சாதன பொருட்கள், கணினி மற்றும் ஒலி உபகரணங்களுக்கு சேதம் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்த குழந்தைகளுக்கு, சமூக நிராகரிப்பு மற்றும் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற ஆபத்தும் உள்ளது.

உமிழ்நீர் ஒழுகுவதை குறைக்க அல்லது தவிர்க்க பல சிகிச்சை தலையீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, அறுவை சிகிச்சை, மருந்துகள், போட்டுலினம் டாக்சின் (Bont-A மற்றும் Bont-பி)), இயன்முறை சிகிச்சைகள், புலனுணர்வு செயல்பாடை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள், அவன் /அவளுக்கு தானே உமிழ்நீரை கட்டுப்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு உதவும்படி அளிக்கப்படும் நடத்தை மாற்று சிகிச்சைகள் , வாயில் பொருத்தப்படும் உபகரணங்கள், மற்றும் குத்தூசி சிகிச்சை முதலியவை அடங்கும்.

பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகளில் உமிழ்நீர் ஒழுகுவதை கட்டுப்படுத்த, எந்த சிகிச்சை தலையீடுகள் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதைக் குறித்து ஒரு தெளிவான ஒருமித்த கருத்து இல்லை. எனவே, எந்த சிகிச்சை தலையீடு மிகவும் பாதுகாப்பானதாயும் பயனுள்ளதாயும் இருக்கும் என்று முடிவெடுப்பது கடினமாக உள்ளது.

சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் (ரண்டோமைஸ்டு கன்ட்ரோல்டு டரயல்ஸ்) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனைகள் (கன்ட்ரோல்டு கிளினிக்கல் டரயல்ஸ்) மாத்திரமே இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது . சோதனைகள், தரவுத்தள மின்னணு தேடல்கள் , மருத்துவ பரிசோதனைகளின் பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள் , சம ஆராய்ச்சியாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகள், வெளியிடப்பட்டிருக்கும் கருத்தரங்கு நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் குறிப்பு பட்டியல்கள் மூலம் அடையாளம் காணப்பட்டன .

ஆறு சோதனைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. நான்கு சோதனைகள், Bont-Aயின் , பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்தது. இரண்டு, பென்ஸ்சோட்ரோபின் மற்றும் கிளைக்காபிரோலேட்டை ஆய்வு செய்தது . பிற சிகிச்சை தலையீடுகள் மீதான சோதனைகள் காணப்படவில்லை. பரிசோதனைகளின் தரம் வேறுபட்டு இருந்தது. அனைத்து சோதனைகளும், சேர்க்கப்பட்ட குழந்தைகள் , பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் , சாதனங்கள் வழங்கப்பட்ட முறை, அதன் திறன் எவ்வாறு அளவிடப்பட்டது ஆகியவற்றில் வேறுபட்டு இருந்தது. அனைத்து சோதனைகளும் உமிழ்நீர் ஒழுகுவதின் அளவு குறைந்தது என்று அறிக்கை செய்தன, மேலும் அனைத்து சோதனைகளும், சிகிச்சை தலையீட்டிற்கு 1 மாதத்திற்கு பிறகு, சிகிச்சை குழுக்களில் சில குறிப்பிடத்தக்க புள்ளிவிவர மாற்றமும் காட்டியது என்றும் காட்டின. சில ஆய்வுகள், வாடிக்கையாளர் மற்றும் /அல்லது பராமரிப்பாளர்களின் சிகிச்சை தலையீட்டின் மேலான திருப்தியை ஆய்வு செய்தன . சிலவை, சிகிச்சை தலையீட்டின் பக்க விளைவுகளை கண்ணோக்கியது. ஆனால் எந்த ஆய்வும் குழந்தையின் வாழ்க்கை தரம் அல்லது உளவியல் நலத்தின் மீது சிகிச்சை தலையீடுகளின் தாக்கத்தை ஆராயவில்லை.

ஒரு தலையீட்டை விட மற்றொரு சிறந்தது என்பதை ஆதரிக்க போதுமான ஆதாரம் இல்லை. இரண்டு சிகிச்சை தலையீடுகள் மட்டுமே மீதான சோதனைகள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டதாலும், மற்றும் ஆய்வு மற்றும் தரத்திலுள்ள வேறுபாடுகள் நிமித்தமாகவும், ஒரு சிகிச்சை தலையீடு மற்றொன்றை காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. பிற சிகிச்சை தலையீடுகளுக்கு சோதனைகள் இல்லாததால், அந்த சிகிச்சை தலையீடுகள் பலனற்றவை என்று அர்த்தமில்லை.

போதுமான புள்ளிவிவர ஆற்றல் கொண்ட நன்கு வடிவமைக்கப்பட்ட சோதனைகள் அனைத்து சிகிச்சை தலையீடுகளுக்கும் தேவைப்படுகிறது. உமிழ்நீர் ஒழுகுதலில் உள்ள மாற்றத்தை பார்ப்பதற்கு நுண்ணிய அளவைகளை பயன்படுத்துவதோடு, வாடிக்கையாளர் மற்றும் /அல்லது பராமரிப்பாளர்களின் திருப்தி, வாழ்க்கை தரம் அல்லது உளவியல் நலத்தில் ஏற்படும் மாற்றங்கள், உமிழ்நீர் ஒழுக்குவதோடு தொடர்புடைய விரும்பத்தகாத அறிகுறிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அளவைகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information