பக்கவாதத்திற்கு வாகன ஓட்டும் புனர்வாழ்வு

பின்புலம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பிற்கு பின் வாகனம் ஓட்டும் ஆற்றல் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பு அங்கங்களை இயக்கும் திறன் ,பார்க்கும் திறன் மற்றும் ஆபத்துகளைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுகிறது. சிகிச்சைக்கு இரண்டு அணுகுமுறைகள் பயன்படுத்தப் படுகிறது. முதலாவது அணுகுமுறையில் வாகனம் ஓட்டுவதற்கு அடிப்படையாக தேவைப்படும் இயக்க திறமை,யோசிக்கும் திறமை மற்றும் உணர்வாற்றல் ஆகியவைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அணுகுமுறையில் வாகனம் ஓட்டுவதுபோல் உருவகப்படுத்தி போலியான வாகனத்தில் பயிற்சி அளிக்கும் பாவனையில் (Simulation) பாடத்திட்ட வடிவில் சாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை வாகனம் ஓட்டுனரின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டு அளிக்கப்படுபவை.

ஆய்வு பண்புகள்

245 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்ட அக்டோபர் 2013 வரையிலான 4 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். அவற்றில் விரிவான தொலைவெல்லை கொண்ட பலவகைபட்ட பயிற்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன . வாகனம் ஓடுவதுபோல் உருவப்கபடுத்தி போலியான வாகனத்தில் பயிற்சி அளிக்கும் பாவனை பயிற்சி, தகவல்களை ஒருங்கிணைக்கும் செயல்முறைகள் ,வருடல் (scanning )மற்றும் இயக்கத்தின் வேகத்தை மேம்படுத்தும் கருவிகள் கொண்டு பயிற்சி, ஆகியவை இதில் அடங்கியுள்ளன .. எல்லா ஆய்வுகளும் எந்த பயிற்சி முறை வாகனம் ஓட்டும் திறன் பரிசோதனையில் வெற்றியளிக்க உதவியது என்று ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளன.

முக்கிய முடிவுகள்

வாகனம் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டவர்கள் பயிற்சி மேற்கொள்ளாதவர்களை விட சிறப்பாக வாகனம் ஒட்டினார்கள் என்று கூற சான்றுகள் இல்லை.ஒரு ஆய்வு, உருவகப்படுத்தி போலியான வாகனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்தவுடன் தேர்வு வைத்தபோது சாலை குறீயிடுகளை கண்டறியும் திறன் நன்கு அதிகரித்திருந்தது.எனக் கண்டறிந்தது.

சான்றின் தரம்

ஒரே ஒரு ஆய்வின் முடிவை பொதுப்படையாக கொள்ள முடியாது ஆகையால் இந்த ஆய்வின் முடிவை எச்சரிகையோடு செயல் படுத்தவேண்டும்.மேலும் எதிர்காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கைகளில் இப்பயிற்சிகளில் ஈடுபடுத்தி விளைவுகளை ஆராயவேண்டும் மற்றும் அவர்களை அவர்களின் ஆற்றல் குறை,பக்கவாத வகை கொண்டு வகைபடுத்தி பயிற்சியளித்து ஆராயவேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:ஹரிகணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information