நாள்பட்ட முதுகு வலிக்கு மொத்த டிஸ்க் (disc) மாற்று சிகிச்சை

செயற்கை மூட்டுகள் முழங்கால் மற்றும் இடுப்பு செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் வலியை குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் முதுகெலும்பு மூட்டு மாற்றுதல் விளைவு என்ன? நாள்பட்ட கீழ்முதுகுவலிக்கு மொத்த டிஸ்க் மாற்று அறுவைச் சிகிச்சை மற்ற சிகிச்சையுடன் ஒப்பிட்டு செய்யப்பட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை ஒன்றுதிரட்டி டிஸ்க் மாற்று அறுவைச் சிகிச்சையின் திறன்னை கண்டறிவதே இந்த திட்டமிட்ட திறனாய்வின் நோக்கம்.

டிஸ்க் முதுகெலும்பின் எலும்பு பகுதியை பிரிப்பதோடு அதற்கு தொய்வகமாகவும் உள்ள ஒரு பலமான ஆனால் நெகிழ்வான அமைப்பு ஆகும். டிஸ்க் சிதைவு கிட்டத்தட்ட மூப்படைதலினால் இயற்கையிலேயே ஏற்படும் பொதுவான அம்சமாக இருக்கிறது. கீழ்முதுகுவலியின் காரணத்திற்கு பல புனைகருத்துக்கள் வைக்கப்பட்டபோதும், நாள்பட்ட அறிகுறிகள் பெரும்பாலும் டிஸ்க் சிதைவு காரணமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. நோயாளிகள் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம் அடையாதபோது, அவர்களுக்கு சில நேரங்களில் சிதைந்த டிஸ்க்கை அறுவை சிகிச்சை முலம் அகற்றுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

இந்த பிரிவில் மரபு வழி அறுவை சிகிச்சை அணுகுமுறை சிதைந்த டிஸ்க்கினை முழுமையாகவோ அல்லது அதன் பகுதியையோ அப்புறப்படுத்தி முதுகு எலும்பின் எலும்பு பகுதியின் மேலும் கீழும் சேர்த்திணைக்கும் முறையை கொண்ட முதுகு தண்டு கூட்டிணைவு ஆகும் . முந்தைய திறனாய்வுகள் இணைதல் அறுவை சிகிச்சை மிதமான வலி நிவாரணம் அளிக்கும் என்றும் மற்றும் செயல்பாடுகள் சுமாராக மேம்படலாம் என்று கூறின. இது பாரம்பரிய இயன்முறை சிகிச்சைகளை விட சிறந்தது என்று தோன்றுகிறது-ஆனால் தீவிர மறுவாழ்வு திட்டத்தை விட உயர்ந்தது என்று தோன்றவில்லை.

இந்த அறுவை சிகிச்சைஅணுகுமுறைக்கு மாற்று மொத்த டிஸ்க் மாற்று சிகிச்சை. இதில் டிஸ்க்கை அகற்றிவிட்டு உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு செயற்கை உள்வைப்பு பொருத்தப்படுகிறது.

மொத்தமாக1474 நோயாளிகலை ஈடுபடுத்தி ஏழு சமவாய்ப்பு கட்டுப்பாட்டு ஆராய்ச்சிகளை நாங்கள் கண்டறிந்தோம். மொத்த டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை அல்லாத சிக்கிச்சையுடன் ஒப்பிடுகையில் ஒரு ஆய்வு, தீவிர புனர்வாழ்வு சிகிச்சையை விட சற்று நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு பரிந்துரைத்தது. ஆனால், நோயாளிகளின் வாழ்கையில் ஒரு பெரியமாற்றத்தை ஏற்படுத்தும் அளவு நோயாளிகள் உணரும்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தாக இதனை மாற்ற முடிய வில்லை.

ஆறு சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் முதுகெலும்புகள் இணைப்பு அறுவை சிகிச்சையுடன் ஒப்பிட்டன. பெரும்பாலான ஆய்வுகள் ஒருதலைச்சார்புக்கு அதிக சாத்தியத்துடன் செய்யப்பட்டதால், இவை இந்த சிகிச்சைகளை ஒழுங்காக சோதித்காமல் இருந்து இருக்கலாம். இந்த ஆராய்ச்சிகளில் மொத்த டிஸ்க் மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள் இணைத்தல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை விட வலி மற்றும் செயல்பாட்டு திறன் விளைவுபயன்களில் சற்றே சிறப்பாக இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வேறுபாடு நோயாளிகள் உணரும்வண்ணம் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

மொத்த டிஸ்க் மாற்று சிகிச்சைக்கு வேறு எந்த பயனும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இந்த திறனாய்வில் கிட்டவில்லை மேலும் இதனால் வரும்க்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றி புரிதல் ஏற்படுவதற்கும் இந்த ஆராய்ச்சிகள் வழி வகுக்கவில்லை. ஆதாரங்களுக்கு இடை உள்ள இடைவெளிகளை கருத்தில் கொண்டு, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்வோர் பெரிய அளவில் இந்த நுட்பத்தை பின்பற்றுவது பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு:க.ஹரிஓம், முருகவேல் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information