ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர், ஏஎஸ்டி) ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பற்றாக்குறை, ஏஎஸ்டி தொடர்புடைய சிரமங்களை விவரிக்க ஓரளவு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, மற்றும் இந்த முக்கியமான கொழுப்பு அமிலங்களை உபச்சத்தாக அளிக்கும் போது, அறிகுறிகள் மேம்படுவதற்கு வழி வகுக்கக் கூடும். ஏஎஸ்டி-யின் மைய பண்புகள் மற்றும் தொடர்புடைய அறிகுறிகளுக்கு, ஒமேகா-3 கொழுப்பு அமில உபச்சத்தின் திறனிற்கான ஆதாரத்தை மதிப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். ஏஎஸ்டி-க்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை ஆராய்ந்த இரண்டு சிறிய சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை மட்டும் நாங்கள் கண்டோம். ஏஎஸ்டி-க்கு, ஒமேகா-3 கொழுப்பு அமில உபச்சத்துகள் ஒரு திறன் மிக்க சிகிச்சை என்பதற்கு போதுமான அளவு ஆதாரம் இல்லை. எனினும், இந்த சிகிச்சையை பற்றி உறுதியான பரிந்துரைகளை செய்வதற்கு முன், உயர்-தர, பெரிய சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information