இளவயது முதுகெலும்பு பக்கவளைவுக்கான உடற்பயிற்சிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவு (அடோலேசென்ட் இடியோபதிக் ஸ்கோலியோசிஸ், ஏஐஎஸ்) என்பது 10 முதல் வளர்ச்சி கால முடிவு வரை இளவயது மக்களைத் தாக்கும் (பொது மக்கள் தொகையில் 2% முதல் 3%) ஒரு அரிய வகை முதுகெலும்பு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு, வயதுவந்த பருவத்திலும் தொடரலாம். இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முப்பரிமாண முதுகெலும்பு வளைவுகளால் பண்பிடப்படுகிறது. ஊனம், ஒப்பனை குறைபாடு, வலி, செயற் குறைபாடு, வாழ்க்கைத் தரச் சிக்கல்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் நபரின் வயது வந்த பருவம் முழுவதும் முதுகெலும்பு பக்கவளைவு இருப்பதற்கான சாத்தியம் ஆகியவை பொதுவாக இந்த நிலையில் தொடர்புள்ளது. இந்த இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுக்கான காரணம் தெரியவில்லை.

இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுக்கான சிகிச்சை, வளைவுகளின் தீவிரத்தன்மையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.அதே மாதிரியாக, உடற்பயிற்சி கிட்டத்தட்ட எப்போதும் சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.கடுமையில்லாத நிலைகளில், உடற்பயிற்சி முக்கிய சிகிச்சையாக இருக்கலாம் மேலும் மிகவும் கடுமையான நிலைகளில் இது ஒரு இணைப்புச் சிகிச்சையாக செயல்படலாம். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் முதுகெலும்பு பக்கவளைவுக்கான இயன் முறை சிகிச்சை என்பது சிகிச்சையளிக்கும் பயிற்சியாளர்கள் நன்கு அறிந்த உடற்பயிற்சி நெறிமுறைகளுடன் கூடிய பொதுவான வலுப்படுத்துதல் மற்றும் நீட்டித்தல் உடற்பயிற்சிகளைக் முக்கியமாக கொண்டுள்ளது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான இயன் முறை சிகிச்சை பயனுள்ளதாக இல்லை என்று இந்த புவியியல் இடங்களின் பயிற்சியாளர்கள் மத்தியில் ஒரு ஒருமித்த உணர்வு இருக்கிறது.

முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் (ஸ்கோலியோசிஸ் ஸ்பெசிபிக் எக்சர்சைஸ், எஸ்எஸ்இ) குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில் தனிப்பட்ட உடற்பயிற்சிகளாக உள்ளன. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் முதுகெலும்பு பக்கவளைவில் நிபுணத்துவம் உடைய மருத்துவ மையங்களில் கற்றுத் தரப்படுகிறது. இந்த உடற்பயிற்சிகள் முதுகெலும்பைப் பாதிக்கும் மென்மையான திசுவை மாற்றுவதன் மூலம் வேலை செய்கிறது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள் முதுகெலும்பு இயக்கத்தின் கட்டுப்பாட்டை மாற்றுவதன் மூலமும் வேலை செய்வதாக எண்ணப்படுகிறது. முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளைப் பயன்படுத்துவதில் எந்த அறியத்தக்க பக்க விளைவுகளோ அல்லது அபாயங்களோ இல்லை.

இந்த திறனாய்வின் நோக்கம் இளவயது காரணமில்லா முதுகு பக்கவளைவுடன் உள்ள இளவயதினரில், வளைவு முன்னேற்றத்தை குறைக்கும் மற்றும் தள்ளிவைக்கும் அல்லது அறுவை சிகிச்சை போன்ற ஊடுருவும் சிகிச்சையை தவிர்க்கும் முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளை மதிப்பீடு செய்வதாக இருந்தது. மொத்தமாக 154 நோயாளிகளை உள்ளடக்கிய இரண்டு ஆய்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு, முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ எந்த ஆதாரங்களையும் காணவில்லை.சேர்க்கப்பட்டிருந்த இரண்டு ஆய்வுகளும், மின் தூண்டல், இழுவை மற்றும் வளைவு முன்னேற்றத்தை தவிர்க்கும் நிலைப் பயிற்சி போன்ற சிகிச்சைகளைக் காட்டிலும் முதுகு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளோடு சேர்க்கப்பட்ட மற்ற சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பதற்கு மிகக் குறைந்த தர சான்று அளித்திருந்தன, மற்றும் ஒரு தனிப்பட்ட சிகிச்சையாக முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகள், பொது இயன்முறை அளித்த அதே முடிவுகளை அளித்திருந்தன.

சேர்க்கைக்கான அடிப்படை விதிகளை பூர்த்தி செய்த சிறு எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் ஒருதலைச் சார்பிற்கான, குறிப்பாக தேர்வு சார்பிற்கான உயர் ஆபத்து சார்பு ஆகியவை இந்த திறனாய்வின் சாத்தியமான வரம்புகளுள் அடங்கும். இளவயது காரணமில்லா முதுகெலும்பு பக்கவளைவுடன் உள்ள இளவயதினரில் பயன்படும் முதுகெலும்பு பக்கவளைவுக்கான பிரத்யேகமான உடற்பயிற்சிகளின் வகைகளைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலுடன், அதிகமான சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் இந்த பகுதியில் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.