இளம் குழந்தைகளில் இழுக்கப்பட்ட முழங்கையை குறைப்பதற்கான பல்வேறு வகையான கையாளுதல் சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பொதுவாக, இழுக்கப்பட்ட முழங்கை என்பது ஒரு இளம் குழந்தையின் கை நேராக இருக்கும் பொழுது பெரியவர்கள் அல்லது உயரமானவர்கள் அதை திடீரென்று இழுப்பதாலோ அல்லது வலிந்திழுப்பதாலோ அல்லது ஒரு குழந்தை திடீர் உணர்ச்சிக்கு ஆட்பட்டு தன் கையை அவர்களிடமிருந்து இழுப்பதாலோ ஏற்படுகிற முழங்கை மூட்டு இடபெயர்வாகும்.உடனடியாக, குழந்தை வலி என்று முறையிடும், மேலும் அவர்கள் கையை உபயோகிக்க முடியாமல் போகிறது.வழக்கமான சிகிச்சை,முழங்கை எலும்புகளை மீண்டும் தமது சரியான நிலையில் பொறுத்த, கையை கையாளும் முறையை கொண்டுள்ளது. இதற்கு பொதுவாக, கையாள்கை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. உள்ளங்கை மேல் இருக்குமாறு கை விரித்தல் ஸுபினேசன் எனப்படும் வழக்கமான உத்தியில் முழங்கை வெளிப்புறமாக திருப்பப்படுகிறது அல்லது சுழற்றப்படுகிறது (குழந்தையின் உள்ளங்கை மேல்நோக்கிய திசையில் பார்த்திருக்கும்),சில நேரங்களில் இதை தொடர்ந்து முழங்கை வளைக்கப்படுகிறது. இது ஒரு தரமான பயிற்சியாக மாறிவிட்ட போதும், இது எப்போதும் வெற்றிகரமான விளைவுகளை அளிப்பதில்லை. மற்ற முறைகளும், குறிப்பாக உள்ளங்கையை கவிழ்நிலையில் வைத்து திருப்புதல் (ப்ரோனேசன்) முறையும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் முழங்கை உட்புறமாக திருப்பபடுகிறது அல்லது சுழற்றப்படுகிறது (குழந்தையின் உள்ளங்கை கீழ் நோக்கிய திசையில் பார்த்திருக்கும்). பொதுவாக இம்முறைகள் பாதுகாப்பானதாக இருக்கிறது, ஆயினும் சிராய்ப்புகள் ஏற்படலாம் மற்றும் அவை வலி மிகுந்ததாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த திறனாய்வு, மொத்தம் 379 குழந்தைகள் சம்மந்தப்பட்ட நான்கு சிறிய குறைந்த தர சோதனைகளை உள்ளடக்கியது. அக்குழந்தைகள் யாவரும், ஏழு வயத்திற்கு குறைவானவர்கள். உள்ளங்கையை கவிழ்நிலையில் வைத்து திருப்பும் (ப்ரோனேசன்)முறையானது (கை கீழ்நோக்கியபடி இருத்தல்) மறுநிலை படுத்துவதில் மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது என்றும், இழுக்கப்பட முழங்கையுடைய குழந்தைகளுக்கு குறைவான வலியை உண்டாக்குவதாக இருக்கிறது என்றும் சான்றுகள் கூறுகிறது

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.