சிஸ்டிக் பைப்ரோசிஸ்-ற்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வி

சிஸ்டிக் பைப்ரோசிஸ் கொண்டிருந்த எல்லா வயதுடைய தனிநபர்களிலும் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களிலும் ஒரு பரவலான ஆரோக்கிய விளைவுகளின் மேல் சிஸ்டிக் பைப்ரோசிஸ்-ற்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வியின் விளைவுகளை திறனாய்வு செய்ய நாங்கள் முனைந்தோம். கிடைக்கப்பெறும் ஆதாரதிற்கான தேடல், நான்கு சோதனைகளை அடையாளம் கண்டது, மற்றும் அவை நான்கும், ஒரு வடிவான சுய-மேலாண்மை விளக்கக் கல்வியை தரப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒப்பிட்டன. சுய-மேலாண்மையின் துல்லியமான நோக்கம் சோதனைகளிடையே வேறுப்பட்டிருந்தன, மற்றும் சிஸ்டிக் பைப்ரோசிஸ்-சை சமாளிப்பதற்கான பயிற்சி திட்டம், நெஞ்சக சிகிச்சைகளின் மீதான விளக்கக் கல்வி, சிஸ்டிக் பைப்ரோசிஸ்-க்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மீதான விளக்கக் கல்வி மற்றும் பொதுவான மற்றும் நோய்-குறிப்பான ஊட்டச்சத்து மீதான விளக்கக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கின. நுரையீரல் செயல்பாடு, எடை, அல்லது கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளல் ஆகியவற்றின் மீது சுய-மேலாண்மை விளக்கக் கல்வி எந்த நேர்மறை விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை. சுய-மேலாண்மை விளக்கக் கல்வி, சிஸ்டிக் பைப்ரோசிஸ் பற்றிய அறிவு, மற்றும் இந்த நிலைமை உள்ள நோயாளிகளில் அதின் மேலாண்மை, மற்றும் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் சில சுய-மேலாண்மை நடத்தைகளை மேம்படுத்துகிறது என்று பரிந்துரைக்க சில ஆதாரம் உள்ளன. எனினும், இந்த திறனாய்வில், குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகள் இருக்கும் காரணத்தினால், மற்றும் இந்த சோதனைகளின் தரம் பற்றிய அக்கறைகளினால் சிஸ்டிக் பைப்ரோசிஸ்-ற்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வியின் விளைவுகள் பற்றி எந்த உறுதியான முடிவுகளை எட்டுவதற்கு எங்களால் முடியவில்லை. சுய-மேலாண்மை விளக்கக் கல்வி சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிட மேற்படியான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information