கீழ் முதுகு வலி மற்றும் சயாடிக்காவுக்கு படுக்கையில் ஒய்வு எடுக்கும் ஆலோசனையும் அல்லது சுறுசுறுப்பாக இயங்கும் ஆலோசனையும்

ஆரம்பநிலைப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் பிரச்சனைகளில் ஒரு பொதுவான நோய் கீழ்முதுகுவலி. இது பணிக்கு செல்ல முடியாமல் போவதற்கும் பணியில் முன்னதாகவே ஓய்வு பெறுவதற்கும் குறிப்பிடத்தக்க ஒரு காரணமாக உள்ளது. இந்த சுமையின் ஒரு பாகத்தை பாதிக்கப்பட்ட தனிநபர்களும் அவர்களது குடும்பம் மற்றும் இந்த சமூகமும் தாங்க வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் படுத்துக்கொள்ளும் பொழுது கீழ் முதுகு வலி மற்றும் சயாடிக்கா (முதுகின் கீழும் கால்களிலும் உள்ள வலி) விலிருந்து சிறிதளவு நிவாரணம் பெறுகின்றனர். 1990-களின் கடைசி வரையிலும் ஓய்வு எடுக்கவும் மற்றும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழ பழகி கொள்ளுமாறும் ஆலோசனை வழங்குவது பொதுவான சிகிச்சையாக இருந்தது. இங்கே சொல்லப்படும் ஒய்வு என்பதன் சரியான தன்மை அல்லது பொருள் மாறுபட்டதாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர் குளியலறை செல்வது மற்றும் சில நேரங்களில் சமையலறை செல்வது தவிர முழு நேரமும் படுக்கையிலேயே இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலான நேரங்களில் இதன் பொருளாக உள்ளது.

இருந்தபோதிலும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்து புதுயுகம் பிறந்த நிலையில் நீடித்த காலம் படுக்கையில் ஓய்வு எடுப்பது கூடுதல் தீங்கு விளைவிக்கும் என்றும் அதனால் தசைகளின் செயல் திறன் மற்றும் உடலியக்கம் பாதிக்கப்படும் என்றும் தெளிவாகியது.

இந்த திறனாய்வின் முடிவுகள் முந்தைய இரண்டு: நாள்பட்ட கீழ் முதுகு வலி மற்றும் சயாடிக்காவுக்கு படுக்கையில் ஓய்வு எடுப்பது மற்றும் கீழ் முதுகு வலி மற்றும் சயாடிக்காவுக்கு சுறுசுறுப்பாக இயங்குதலே ஒரே சிகிச்சை என ஆலோசனை வழங்கப்பட்ட திறனாய்வுகளை இணைத்து மற்றும் புதிதாக ஆய்வுரைகளின் தேடல் அடிப்படையிள் எடுக்கப்பட்டது.  புதிய மருத்துவ ஆராய்ச்சிகள் எதுவும் அறியப்படவில்லை.

இந்த புதுப்பிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட திறனாய்வு 10 சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியது.(அதில் மொத்தம் 1923(N = 1923) பேர் உட்படுத்தப்பட்டிருந்தனர்). சயாடிக்காவுடன் கூடிய கீழ் முதுகு வலியுள்ளவர்கள் மற்றும் சயாடிக்கா இல்லாத கடுமையான கீழ் முதுகு வலி (6 வாரங்கள் குறைவாக வலி) உள்ளவர்களுக்கு ஓய்வெடுக்கும்படியோ அல்லது தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும்படியோ வழங்கப்பட்ட ஆலோசனைகளின் விளைவுகளை மதிப்பீடு செய்தது.

சுறுசுறுப்பாக இருக்குமாறு ஆலோசனை வழங்கபட்டவர்களுடன் ஓய்வு எடுக்க ஆலோசனை வழங்கபட்டவர்களை ஒப்பிடும்பொழுது சுறுசுறுப்பாக இருக்குமாறு ஆலோசனை வழங்கபட்டவர்களுக்கு வலி நிவாரணத்திலும் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளிலும் சிறிய அளவில்முன்னேற்றம் இருந்ததாக மிதமான தரமுள்ள ஆய்வுகள் காண்பித்தன. இருப்பினும், சயாடிக்கா உள்ள மற்றும் இல்லாதவர்களுக்கு இரண்டு அணுகுமுறைகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் காணப்படவில்லை அல்லது சொற்ப வேறுபாடுகளே இருந்தது.புதிதாக இனி செய்யப்படும் ஆராய்ச்சிகள் விளைவுகள் பற்றிய மதிப்பீட்டில் நமக்குள்ள நம்பிக்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை  ஏற்படுத்தவும் மற்றும் மதிப்பீடுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சயட்டிக்கா உள்ள அல்லது இல்லாத நோயாளிகளுக்கு சுறுசுறுப்பாக இயங்கும் படி ஆலோசனை பெற்றிருந்தாலும் உடற்பயிற்சிகள், இயன்மருத்துவசிகிச்சை பெற்றாலும் அவர்களது செயல்பாடுகள் அல்லது வலிநிவாரணத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை, அல்லது மிகசொற்பவேறுபாடுகளே இருந்தன என்று தரம்குறைந்த சான்றுகள் கருத்துரைக்கின்றன வரவிருக்கும் ஆராய்ச்சிகள் விளைவுகள் மீதான மதிப்பீட்டில் முக்கியமான தாக்கத்தை  ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது மேலும் அதில் நமக்குள்ள நம்பிக்கையை மாற்றவும் செய்யலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information