சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவரிடம் முன்கூட்டிய பரிந்துரைப்பு

சிறுநீரக செயலிழப்பு சில அளவில், சுமார் 15%முதல் 25% மக்களைப் பாதிக்கிறது மற்றும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் மிகவும் தாமதமாகவே தோன்றி ஒரு தனிப்பட்ட நபரின் மேல் அமைதியாக பரவக் கூடிய நோயாக உள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறுதி-கட்டமாக ஏற்படும் போது, கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை ஆகிய வடிவத்தில் உள்ள வாழ்க்கைத் துணை சிகிச்சை முறை மட்டுமே நோயாளிக்கு தேர்வுச் சிகிச்சையாக உள்ளது. இவ்வகையான சிகிச்சை முறை மிகவும் விலையுயர்ந்ததாகவும் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தகாததாகவும் உள்ளது. இந்த இடரை தடுப்பதற்கு, இந்த இறுதி கட்டத்திற்கு முன்னேற்றமடையாமல் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பெரிதும் இன்றியமையாததாகும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட மக்கள் சம்பந்தப்பட்ட 40 ஆய்வுகளில், முன்கூட்டியே சிறப்பு சிறுநீரக மருத்துவருக்கு பரிந்துரை செய்யப்பட்ட மக்கள் அதிகக் காலம் வாழ்ந்தனர் என்று எங்கள் பகுப்பாய்வுகள் காட்டுகிறது. முன்கூட்டி பரிந்துரைக்கப்பட்ட மக்களின் இறப்பு விகிதம், தாமதமாய் பரிந்துரைக்கப்பட்டவர்களில பாதியாக இருந்தது மற்றும் இந்த ஆதாயங்கள் ஆரம்ப மூன்று மாதங்கள் முதலே காணப்பட்டு மற்றும் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் நீடித்து இருந்தது. முன்கூட்டியே பரிந்துரைக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் குறைவான நேர மும் கழித்து மற்றும் கூழ்மப்பிரிப்புக்கான சிறந்த முறையில் தயார் நிலைக்கு ஆயத்தமாயிருந்தனர். கூழ்மப்பிரிப்பிற்கு முதலில் ஒரு ஃபிஸ்துலாவை அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்துதல் வேண்டும், மற்றும் முன்கூட்டிய சிறப்பு மருத்துவர் சேவைகள் பரிந்துரை என்பது பெரும்பாலும், சிறந்த ஆயத்தமாக்குதல் , தொற்று மற்றும் மற்ற சிக்கல்களுக்கான குறைந்த ஆபத்து என்று பொருள் படும்.

முன்கூட்டிய சிறப்பு மருத்துவர் பரிந்துரைப்பினால் எந்த பாதகமான விளைவுகளையும் நாங்கள் கண்டறிய வில்லை. அனைத்து ஆய்வு வடிவமைப்புகளிலும், சீரற்று கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மிகவும் நம்பகமான தகவல் வழங்குபவை, எனவே இந்த திறனாய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து 40 ஆய்வுகளும் ஒரே விதமாய் தொடர்புடைய மக்களை பின்தொடர்ந்த வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டது என்று அறியப்பட வேண்டும். ஒரே விதமாய் தொடர்புடைய மக்களை பின்பற்றிய ஆய்வுகள், அடுத்த சிறந்த அளவிலான சான்று நிலை மற்றும் இருக்கின்ற ஒரே சான்றாகும். நெறிமுறை காரணங்களுக்காக, தாமதமாக சிறப்பு மருத்துவ பரிந்துரைப்பிற்கு வேண்டுமென்றே நோயாளிகளை ஒதுக்கும் ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை நடத்தப்படும் என்று கூற முடியாது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்:தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information