முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தொடைத்தசையை வலுப்படுத்த மின் தூண்டுதல் சிகிச்சை

இந்த காக்ரேன் திறனாய்வு, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தொடைத்தசையை வலுப்படுத்துவதில் மின் தூண்டுதல் சிகிச்சையின் பயன்கள் குறித்து நாம் அறிந்தவற்றை தெரிவிக்கின்றது.

இந்த காக்ரேன் திறனாய்வு, மிகவும் குறைந்த தரம் வாய்ந்த ஆதாரங்களே இருப்பதினால் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தொடைத்தசையை வலுப்படுத்துவதில் மின் தூண்டுதல் சிகிச்சைக்கு பயன்கள் உள்ளதா என உறுதியாக சொல்ல இயலாது என தெரிவிக்கிறது

தொடைத்தசை பலவீனம் என்றால் என்ன மற்றும் மின் தூண்டுதல் என்றால் என்ன?

முழங்கால் கீழ்வாத்தினால் மூட்டுவலி மற்றும் மூட்டு உறுதி அற்ற இருக்கும்.முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை சில நேரங்களில் கீழ்வாதத்திற்கு ஏற்ற சிகிச்சையாக கருதப்படும். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக நோயாளிகள் தமது தொடையில் தசை வலிமை இழக்க நேரிடும்.  எனவே உட்கார்ந்த நிலையில் இருந்து நிற்க கடினமாக இருக்கும். ஒரு வருடம் கழிந்துகூட, சிலருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்ததை விட மிகவும் பொருமையாக நடப்பது மற்றும் மாடிப்படி ஏறுவர்.

மின் தூண்டுதல் என்பது மின்சாரம் மூலம் தொடைத் தசையை உடற்பயிற்சி செய்யும் பொழுது எப்படி சுருங்குமோ அதைப் போல், சுருக்குவது.  மின்முனை என்பது சிறிய இயந்திரத்தில் இருந்து மின்சாரத்தை உங்கள் தொடைத்தசைக்கு செலுத்த பயன்படுத்தப்படும் கம்பிகள். பொதுவாக, மருத்துவர் அல்லது இயன்மருத்துவர் உங்கள் தொடையின் தோல் மீது பசைப்பட்டையை வைத்து மின்முனைகளை இணைப்பர்.இந்த சிகிச்சை பொதுவாக ஒட்டுமொத்த உடற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பா. ஜெயலக்ஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information