தாளிறுக்கம் நோய்க்கு (frozen shoulder) ஆர்த்ரோகிராபிக் விரிதல் (Arthrographic distension)

தாளிறுக்கம் (adhesive capsulitis)க்கு ஆர்த்ரோகிராபிக் விரிதல் (Arthrographic distension) சிகிச்சை குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் திறனாய்வு சுருக்கம் வழங்குகிறது. தாளிறுக்கம் (adhesive capsulitis) உள்ள மக்களுக்கு:

ஸ்டீராய்டு மற்றும் உப்பு கரைசல் கொண்டு விரிவடைதலை, மருந்துப்போலி யுடன் (போலி விரிவடைதல்) ஒப்பிடும்போது ;

- மூன்று வாரங்களுக்கு பின் வலி குறையக் கூடும்.
- 3, 6,மற்றும் 12 வாரத்தில் இயலாமையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஸ்டீராய்டு மற்றும் உப்புகரைசல் கொண்டு ஊசி போடுதலை ஸ்டீராய்டு ஊசி போடுதலுடன் ஒப்பிடும்போது;

- வலி மற்றும் இயலாமையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

பக்கவிளைவுகளைப் பற்றிய துல்லியமான தகவல்கள் இல்லை. சாத்தியமான சிறிய பக்க விளைவுகள்- வலி அல்லது நடைமுறையின் போது மூடிய இடம் பற்றிய பீதி-மற்றும் தோள்பட்டையில் திரவத்தின் அசைவினால் ஏற்படும் ஒலிகள்

தாளிறுக்கம் (adhesive capsulitis) மற்றும் ஆர்த்ரோ கிராபிக் விரிதல் (Arthrographic distension) என்றால் என்ன?

தாளிறுக்கத்திற்கு (adhesive capsulitis) வேறு பெயர்கள்- "உறைந்த தோள்" (frozen shoulder). உண்மையில் அது மிகவும் வலி, மற்றும் விறைப்புத்தன்மை உடையது. ஆதலால் உங்கள் தோள்களை சாதரணமாக நகர்த்துவதை கடினமாக்கும். சில நேரங்களில் உங்கள் தோள்பட்டை இயக்கத்தின் இழப்பு, முற்றிலும் உறைந்துபோனது போல் உணரச் செய்கிறது. அது தோள்பட்டை மூட்டுக்குள் உருவாகும் வடு போன்ற திசு (ஒட்டுதல்களால்) காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆர்த்ரோகிராபிக் விரிதல் (Arthrographic distension) என்பது, தோள்பட்டைக்குள் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மற்றும் இயலாமைக்கு காரணமாக இருக்கலாம் என்று என்னப்படுகின்ற ஒட்டுப்பண்புடைய திசுக்களை உடைக்க ஒரு திரவத்தை உட்செலுததும் ஒரு செயல்முறை. சிகிச்சையைப் பொறுத்து உப்பு கரைசல் அல்லது ஸ்டீரயொட்ஸ் மருந்துகளை திரவ வடிவில் கொண்டிருக்கும்.

தாளிறுக்கம் (adhesive capsulitis) நோயாளிகளுக்கு ஆர்த்ரோகிராபிக் விரிதல் (Arthrographic distension) சிகிச்சைக்கு பின் என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:

சிகிச்சைக்குப் பின் மூன்று வாரத்தில் வலி:, நோயாளிகளின் வலி 0-10 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 2 புள்ளிகள் அளவிற்கு மாற்றம் இருந்தது.இது குறைந்த பட்சம் 1.1 இருந்து அதிக பட்சம் 3.5 புள்ளிகள் வரை 1-10 என்ற அளவுகோளில் இருந்திருக்கக்கூடும்.

இயலாமை: சிகிச்சைக்குப் பின் மூன்று வாரத்தில், நோயாளிகளின் இயலாமை 0-100 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 11 புள்ளிகள் அளவிற்கு மாற்றம் இருந்தது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது . இந்த மாற்றம் குறைந்த பட்சம் 4 அல்லது அதிக பட்சம்11 புள்ளிகள் வரை இருந்திருக்கலாம் மற்றொரு ஆய்வு இயலாமை 17 புள்ளிகள் வரை குறையும் என்று கண்டறிந்தது. இது குறைந்தளவு 6 புள்ளியில் இருந்து அதிகளவு 28 புள்ளிகள் வரை 1-100 என்ற அளவுகோளில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.

சிகிச்சைக்குப் பின் ஆறு வாரத்தில் நோயாளிகளின் இயலாமை 0-500 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 46 புள்ளிகள் அளவிற்கு மாற்றம் இருந்தது. இந்த மாற்றம் குறைந்தது 20 ல் இருந்து அதிக பட்சமாக 80 புள்ளிகள் வரை 0-500என்ற அளவுகோளில் இருந்திருக்கக்கூடும்.

சிகிச்சைக்குப் பின் 12 வாரத்தில் :, நோயாளிகளின் இயலாமை 0-500 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 54 புள்ளிகள் அளவிற்கு மாற்றம் இருந்தது. இந்த மாற்றம் குறைந்தது 15 புள்ளியில் இருந்து அதிகபட்சமாக் 95 புள்ளிகள் வரை 0-500 என்ற அளவுகோளில் இருந்திருக்கக்கூடும்.

தரப்பட்டுள்ள எண்ணிக்கை எங்களின் சிறந்த மதிப்பீடு. எங்கு வாய்ப்புள்ளதோ அங்கு நாங்கள் வேறுபாட்டு எல்லையை கொடுத்துள்ளோம்.ஏனெனில் 95 விழுக்காடு வாய்ப்பு உண்மையான விளைவுக்கு அந்த வேறுபாட்டு எல்லையில் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரிஓம், க. அழகுமூர்த்தி மற்றும் சி.இ, பி.என்.அர் குழு

Tools
Information